மேலும் அறிய
Advertisement
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபம்: பொற்றாமரை குளத்தில் ஏற்றப்பட்ட லட்ச தீபம் !
தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி திராளான பக்தர்கள் வழிபட்டனர்.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது.
#Madurai | மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு; பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
— arunchinna (@arunreporter92) November 26, 2023
Further reports to follow - @abpnadu
|@SRajaJourno | @k_for_krish | @tiwarymanoj | @LPRABHAKARANPR3 | @abpmajhatv | @ramaniprabadevi | @MaduraiCinemas | pic.twitter.com/rXa6gEsXeF
தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா கடந்த 21 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தினமும் காலை , மாலை வேளைகளில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகள் கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். திருக் கார்த்திகையை முன்னிட்டு இன்று மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி , உள்பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று , லட்ச தீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.
மீனாட்சி - சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளுவார்கள். அங்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதே போன்று மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன், முக்தீஸ்வரர் கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கார்த்திகை தீப ஏற்றி திராளான பக்தர்கள் வழிபட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion