IPL 2025 CSK Squad: இந்த வாட்டி NO மிக்சர்! ஏலத்தை தெறிக்கவிட்ட சிஎஸ்கே.. முழு அணிவிவரம் இதோ
IPL 2025 CSK Team Players List: ஐ.பி.எல். 2025ம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஐ.பி.எல். 2025ம் ஆண்டுக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, முன்னணி வீரர்கள் அனைவரும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இளம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தக்க வைத்த வீரர்கள்:
5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற, மிகவும் முக்கியமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
தோனி, ஜடேஜா, ருதுராஜ், துபே மற்றும் பதிரானா ஆகியோரை ஏற்கனவே தங்கள் அணிக்காக தக்க வைத்திருந்த நிலையில், இதுவரை நடைபெற்ற ஏலத்தில் கான்வே, ராகுல் திரிபாதி, ஷைக் ரஷீத், அஸ்வின், விஜய் சங்கர், சாம் கரண், அன்ஷூல் காம்போஜ், தீபக் ஹூடா, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சௌத்ரி ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
இவர்களில் அதிகபட்சமாக நூர் அகமதை ரூபாய் 10 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, அஸ்வினை ரூபாய் 9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: IPL 2025 Unsold Players: இவர்களுக்கே இந்த நிலைமையா? சீண்டாத அணிகள்.. ஏலத்தில் விற்கப்படாத டாப் ஐந்து வீரர்கள்
ஏலத்தில் எடுத்த வீரர்கள்:
- டேவான் கான்வே – ரூபாய் 6.25 கோடி
- ராகுல் திரிபாதி – ரூபாய் 3.4 கோடி
- ரச்சின் ரவீந்திரா – ரூ.4 கோடி
- அஸ்வின் – ரூ. 9.75 கோடி
- கலீல் அகமது – ரூ.4.80 கோடி
- நூர் அகமது – ரூ. 10 கோடி
- விஜய் சங்கர் – ரூ. 1.2 கோடி
- சாம் கரண் – ரூ 2.4 கோடி
- ஷைக் ரஷீத் – ரூ.30 லட்சம்
- அன்ஷூல் காம்போஜ் – ரூ.3.4 கோடி
- முகேஷ் சௌத்ரி – ரூ.30 லட்சம்
- தீபக் ஹூடா – ரூ 1.7 கோடி
- குர்ஜன்ப்ரீத்சிங் - ரூ.2.20 கோடி
- வன்ஷ் பேடி- ரூ 30 லட்சம்
- கமலேஷ் நாகர்கோட்டி- ரூ 30 லட்சம்
- நாதன் எல்லீஸ் - ரூ 2 கோடி
- ஷ்ரேயஸ் கோபால் - ரூ 30 லட்சம்
- ராமகிருஷ்ண கோஷ் - ரூ 30 லட்சம்
- ஆண்ட்ரே சித்தார்த் - ரூ 30 லட்சம்
- ஜேமி ஒவர்டன் - ரூ 1.5 கோடி
சென்னை அணிக்காக ஆடி வரும் தோனி, ஜடேஜா, ருதுராஜ், துபே, பதிரானாவுடன் ஏற்கனவே சி.எஸ்.கே.விற்காக ஆடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த அஸ்வின், சாம்கரண் மீண்டும் இணைந்திருப்பது அவர்களுக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. இவர்களுடன் ரவீந்திரா, கான்வே, முகேஷ் சௌத்ரியை மீண்டும் ஏலத்தில் தக்க வைத்துள்ளனர்.
அதேசமயம் ரஹானே, ரஹ்மான், மோயின் அலி, ரிஸ்வி, துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூரை, டேரில் மிட்செல் ஏலத்தில் எடுக்கவில்லை.