கையில் துப்பாக்கி... திடீர் தாக்குதல்.. குறி வைக்கப்பட்ட நகைக்கடை! பதைபதைக்கும் வீடியோ
இந்த சம்பவம் ஜூன் 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு, பிகாரில் உள்ள ஹஜிபூரில் அரங்கேறியுள்ளது.
பிகாரில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் நகைக்கடை ஒன்றில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு, பிகாரில் உள்ள ஹஜிபூரில் அரங்கேறியுள்ளது.
On Camera, Armed Robbers Strike Jewellery Shop In Bihar. Owner Shot Dead. https://t.co/lrpDlvjGjV pic.twitter.com/fmtC8vdvLM
— NDTV News feed (@ndtvfeed) June 26, 2022
ஹஜிபூரின் மைய பகுதியில் உள்ள சுபாஷ் மற்றும் மடை சௌக்கிற்கு மத்தியில் அமைந்துள்ள நீலம் நகைக்கடைக்குள் ஐந்து கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.
बिहार pic.twitter.com/hFQRVOBsQn
— Sanket Upadhyay (@sanket) June 26, 2022
கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்குள்ள வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளனர். பின்னர், நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தபோது உரிமையாளர் சுனில் பிரியதர்ஷி கடுமையாக எதிர்த்துள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் இறுதியாக அவரை சுட்டு கொன்றனர்.
இதையும் படிக்க: அதிமுக-வை அழிக்க நினைத்தால், அழிந்துபோவார்கள் என செல்லூர் ராஜூ பேச்சு
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். நகைக்கடை அமைந்துள்ள பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, யாரும் கைது செய்யப்படவில்லை.
நகைக்கடைக்கு உள்ளேயே கொள்ளையர்கள் புகுந்து கொலை செய்திருப்பது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
On Camera, Armed Robbers Strike Jewellery Shop In Bihar. Owner Shot Dead. https://t.co/U740E01uPJ
— Tech Nelofar (@NelofarTach) June 26, 2022
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்