அதிமுக-வை அழிக்க நினைத்தால், அழிந்துபோவார்கள் என செல்லூர் ராஜூ பேச்சு
அதிமுக-வில் ஏற்பட்டுள்ளது சிறிய உரிமை பிரச்சினைதான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ கூறியுள்ளார்.
அதிமுகவில் சிறிய பிரச்சினைகள்தான் அதை சிலர் பெரிதாக்குகிறார்கள் என்றும் அதிமுகவை எந்த கட்சியாலும் அழிக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி திட்டமிட்டப்படி கூடும். அதிமுக தொண்டர்கள் சாதி மதங்களை காட்டி பிரிக்க நினைத்தால் அதற்கு இடம் கொடுக்க கூடாது என்று செல்லூர் கே ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
மதுரையில் செய்தியாளர்களைச் சந்திப்பில் பேசிய செல்லூர்ராஜூ கூறியதாவது:
அதிமுகவை எந்த மாநில கட்சியாலும், தேசிய கட்சியாலும் பிரிக்க முடியாது. அப்படி நினைத்தவர்கள் அழிந்துபோவார்கள். அதிமுக-வில் ஏற்பட்டுள்ளது சிறிய உரிமை பிரச்சினைதான். சிலர் அதை பெரிதாக்குகிறார்கள். அதிமுக-வில் பிளவுகள் இல்லை. 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்தது அதிமுக என்ற பேரியக்கம்தான். அதிமுக மக்கள் கட்சி’ அதிமுக தொண்டர்களின் கட்சி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுகவினரிடையே நிகழ்ந்துவரும் சர்ச்சை தொடர்ந்துவரும் நிலையில், அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட உள்ளது.
வரலாற்றிலே:
அதிமுக வரலாற்றிலேயே முதன்முறையாக சிறிது நேரத்திலேயே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டமாக இன்றைய அதிமுக கூட்டம் மாறியிருக்கிறது.
CUET 2022: இளநிலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி: இனி நீட்டிப்பு இருக்காது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்