ஓமைக்ரான் வகை கொரோனா, மிக எளிதாக பரவக்கூடிய அறிகுறியைக் கொண்டுள்ளது - தலைமை மருத்துவ ஆலோசகர்
ஓமைக்ரான் வைரசின் மேற்பரப்பில் உள்ள புரத மூலக்கூறுகளில் 30-க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியான ஆண்டனியோ ஃபெளசி ஓமைக்ரோன் வகை கொரோனா குறித்து பேசியதில், “ஓமைக்ரான் மிக எளிதாக பரவும் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. அனைத்து நாடுகளும் ஓமைக்காரனுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கத் தயாராக இருப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஓமைக்ரான் வகை கொரோனாவைத் தடுக்க அமெரிக்கா மீண்டும் லாக்டவுன் நடவடிக்கை எடுக்க தேவையாக இருப்பின் அதையும் செய்ய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்-19 வைரசின் புதிய மாறுபாடு மறுபடியும் ஒருமுறை தடுப்பூசியின் செயல்திறனை கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. ஓமைக்ரான், கொரோனா வைரசின் புதிய மாறுபாடு தடுப்பூசியை வலுவிழக்கச் செய்யலாம் என்று எய்மஸ் ஆய்வு கூறுகிறது.
ஓமைக்ரானின் அபாயம் குறித்து உலக சுகாதார மையமும் எச்சரித்துள்ளது.
The new #COVID19 virus variant - Omicron - has a large number of mutations, some of which are concerning. This is why we need to speed up our efforts to deliver on #VaccinEquity ASAP and protect the most vulnerable everywhere. https://t.co/b9QBMJXtJl
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 26, 2021
ஓமைக்ரான் வைரசின் மேற்பரப்பில் உள்ள புரத மூலக்கூறுகளில் 30-க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் நடந்திருப்பதாக எய்ம்ஸ் முதன்மை மருத்துவர் ரந்தீப் குலேரியா கூறுகிறார். பொதுவாக தடுப்பூசிகள் வைரசின் மேற்பரப்பிலுள்ள புரதக் கூறுகளுக்கு எதிராக செயல்படுவதன் மூலமாகத்தான் உடலின் எதிர்ப்புத் திறனை தூண்டி விடும். தற்போது, வைரஸில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் அதற்குத் தடை விதிப்பதால், ஓமைக்ரான் தடுப்பூசியிலிருந்து எதிர்ப்புத் திறனை வளர்த்துக்கொண்டிருப்பதாகக் கருதலாம் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )