OPS IN GUJARAT: குஜராத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவை தொடங்கி வைத்த ஓ.பன்னீர்செல்வம்
குஜராத் அகமதாபாத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இப்பொங்கல் விழாவில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
குஜராத் பயணம்:
ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென குஜராத்திற்கு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குஜராத் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அங்கு கர்ணாவதி தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்து நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். அங்கு பா.ஜ.க. மேலிடத்தில் பேசி எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் இணைந்து செயல்படும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அகமதாபாத் புறப்படும் பயணத்துக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது, அரசியல் காரணங்களுக்காக செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்வுக்காக நீதிமன்றத்தில் இருக்கும் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுகவுக்குள் காய்களை வேகமாக நகர்த்த வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
மேலும், “அதிமுகவின் சின்னம் முடங்க நான் காரணமாக இருக்க மாட்டேன்” என ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு அதிமுக ஒரே அணியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் மாநிலம் மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.