Ban on Chinese Apps | நீக்கப்படுகிறதா டிக்டாக் தடை.. மத்திய அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல் என்ன?
சீன செயலிகள் மீதான தடையை நீக்கும் பரிசீலனைக்கே இடமில்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் கூறி சீன நாட்டின் பப்ஜி, டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த 2020 செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. இதனால் டிக் டாக்கை வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே உபயோகித்துவந்தவர்கள் வருத்தமடைந்தனர்.
மேலும், சீப்பை ஒளித்துவைப்பதற்கும் கல்யாணம் நிற்பதற்கும் எப்படி சம்பந்தமில்லையோ அதுபோல்தான் சீனாவின் செயலிகளுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் சம்பவந்தமில்லை என பலர் கூறினர். டிக் டாக் மீதான தடையை திரும்பப் பெற வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
Vijay 66 Update: தளபதி 66 அப்டேட்! சாமி சாமி பாடல் ஹிட்.. விஜய் படத்துக்கு பாடும் ராஜலட்சுமி!
இந்நிலையில், டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகள் மீதான தடையை நீக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என நாடாளுமன்றத்தில் என்று எம்.பி. மலூக்நகர் இன்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், “தடையை நீக்குவதற்கான பரிசீலனைகூட செய்யப்பட மாட்டாது. கூகுள் போன்ற இணையதள தேடுபொறிகள் இளைஞர்கள் மூலம் உருவாக்கப்படுகிறது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video: ரணகளமான திருமண ஊர்வலம்.. எகிறி குதித்து எஸ்கேப் ஆன மாப்பிள்ளை.. நடந்தது என்ன?
Watch Video | இப்படி ஒரு மீனா? ஆய்வாளர்கள் கண்டுபிடித்த கண்ணாடி மீன்!
Maternity Leave for Students | கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு!
சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும்? - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
Thangamani Raid | முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : ரூ.2.16 கோடி பறிமுதல்
Natarajan Cricket Ground | ’கனவு நனவாகும்’ - சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் தொடங்கிய நடராஜன்..