மேலும் அறிய

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!

மூத்த மகள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்காக ரூ.5,100 ஆன்லைனில் செலுத்தியதுடன் இறுதிச் சடங்குகளை வீடியோ அழைப்பு மூலம் நேரலையில் ஒளிபரப்புமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஹரியானா மாநிலத்தில் முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கிற்கு மகள்கள் வர மறுத்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. வாழ்க்கை இவ்வளவு மோசமாகி விட்டதா என பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். 

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தந்தை

ஹரியானா மாநிலம் சோனிபத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மும்பையைச் சேர்ந்த முன்னாள் ஜவுளி வியாபாரியான சிவசரண் ராம் ரத்தன் குப்தா தற்போது வயது மூப்பால் கவனிக்க யாருமின்றி சோனிபட்  மேற்கு ராம் நகரில் உள்ள சமாஜ் கல்யாண் சிக்ஷா சமிதியால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். மகள்கள் 3  பேரையும் திருமணம் செய்து கொடுத்த நிலையில் கவனிக்க யாரும் இல்லாததால் தனது மனைவி மீனாவுடன் இந்த இல்லத்திற்கு வந்தார். ஆனால் அவர் மனைவி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் ஆகஸ்ட் 4ம் தேதி அதிகாலை சிவசரண் குப்தாவும் உடல்நலக்குறைவால் காலமானார். 

நேரலையில் நடந்த இறுதிச்சடங்கு 

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த முதியோர் இல்லம் அவரின் 3 மகள்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. நீங்கள் வருவதாக இருந்தால் தகுந்த ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால்  நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பையில் வசித்து வந்த அவர்களால் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ள முடியவில்லை. 

Also Read: ரேஷன் கார்டு இல்லையா? கவலை வேண்டாம்... புதுச்சேரியில் களமிறங்கிய 'எக்ஸ்ட்ரா லைட்' கேஸ் சிலிண்டர்!

இதில் கொடுமை என்னவென்றால் மூத்த மகள் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்காக ரூ.5,100 ஆன்லைனில் செலுத்தியதுடன் இறுதிச் சடங்குகளை வீடியோ அழைப்பு மூலம் நேரலையில் ஒளிபரப்புமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் உடல் தகனம் முடிந்த பிறகு இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் வீடியோக்களைத் தங்களுக்கு அனுப்புமாறு மகள்கள் முதியோர் இல்லத்திடம் கேட்டுள்ளனர். 

இதைவிட மோசம் என்னவென்றால் மகள்களில் ஒருவர், இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும் என முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் மோசமாக நடந்துள்ளார். தந்தையின் அஸ்தியை பாதுகாத்து வையுங்கள். நாங்கள் நேரம் இருக்கும்போது வந்து பெற்றுக் கொள்கிறோம் என முதலில் தெரிவித்து விட்டு பின்னர் நீங்களே அந்த அஸ்தியை கங்கையில் கரைத்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாஅனது

இவ்வளவு மோசமானதா வாழ்க்கை?

இதனைத் தொடர்ந்து அந்த 3 மகள்களை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தனர். உங்கள் பெற்றோரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாவிட்டால், இந்த வாழ்க்கையில் என்ன அர்த்தம் இருக்கிறது?.. என ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர், இதைவிட வேதனையானது வேறு என்ன இருக்க முடியும். ஒரு தந்தையின் கடைசி ஆசை தன் மகள்களைச் சந்திப்பதுதான், ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

ஆனால் சிவசரண் ராம் ரத்தன் குப்தா எப்போதும் தன் மகள்களைப் பற்றி பெருமை பேசுவார். தினமும் மகள்களிடம் பேசுவார். கடந்த 20 நாட்களுக்கு முன்பே தந்தையின் உடல்நிலை மோசமானதை மகள்களிடம் தெரிவித்த நிலையில் யாரும் வரவே இல்லை என முதியோர் இல்லத்தினர் ஆதங்கப்பட்டுள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget