மேலும் அறிய

எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

இந்தியா கச்சா எண்ணெய்க்கும் வளைகுடா நாடுகளை தான் சார்ந்துள்ளது. ஆனால் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

ஈரான் போர் காரணமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியா பெரிய அளவில் எல்பிஜிக்கு வளைகுடா நாடுகளை சார்ந்திருப்பதே இதற்கு காரணம். போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கேஸ் கப்பல்கள் எதுவும் இந்தியா வந்தடைய முடியவில்லை.

எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

இந்தியா கச்சா எண்ணெய்க்கும் வளைகுடா நாடுகளை தான் சார்ந்துள்ளது. ஆனால் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதற்கு காரணம் இந்தியா கணிசமான அளவு கச்சா எண்ணெய் வாங்கி சேமித்து வைத்துள்ளது. சிக்கலான ஒரு காலம் ஏற்பட்டு வெளியில் இருந்து கச்சா எண்ணெயே கிடைக்காது என்ற சூழலில் இந்த சேமிப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் எடுத்து பயன்படுத்தப்படும். கச்சா எண்ணெய் போல இந்தியாவில் கேஸ் சேமிப்பிற்கான கிடங்குகள் இல்லை. இதனால் தான் ஈரான் போரால் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த பிரச்சினையை சரி செய்ய மத்திய அரசு 42 பில்லியன் டாலர் முதலீட்டில் கேஸ் சேமித்து வைக்கும் கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாம்.

இந்த திட்டத்திற்கு நிதி திரட்ட எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் பெற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அவசரகால தேவைகளுக்காகவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் 42 பில்லியன் டாலர் அதாவது சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் எரிபொருள் சேமிப்பு (Strategic Fuel Reserve) கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக, சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவோரிடம் இருந்து புதிய வரிகளை விதிக்க பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன்படி வழக்கமாக நாம் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது செலுத்தும் கட்டணத்தில் கூடுதலாக ஒரு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பெட்ரோலிய அமைச்சகம் ஒரு கிலோ எல்பிஜிக்கு 1.29 ரூபாய் என்ற அளவில் வரி விதிக்க ஆலோசித்து வருகிறதாம். இந்த வரி நடைமுறைக்கு வந்தால், வழக்கமான ஒரு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கு நாம் கூடுதலாக 18 ரூபாய் வரியாகவே செலுத்த நேரிடும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு 460 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என கணக்கிடப்படுகிறது.

எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

மொத்தமாக சமையல் எரிவாயு மற்றும் இயற்கை எரிவாயுக்கு கூடுதல் வரி விதித்து அரசு ஓராண்டில் 1.5 பில்லியன டாலர் வரை வருமானம் பெறும். இதனை கொண்டு கேஸ் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவது பராமரிப்பது போன்ற செலவுகளை மேற்கொள்ள இருக்கிறது. சர்வதேச அளவில் எதிர்பாராத புவிசார் அரசியல் நெருக்கடிகள் அல்லது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய இந்த கேஸ் சேமிப்பு கட்டமைப்பு மிகவும் அவசியம்.

இந்த திட்டத்திற்கு தேவையான நிதிச்சுமையை அரசே முழுமையாக ஏற்பதற்கு பதிலாக, பொதுமக்கள் மீது சிறிய அளவிலான கட்டணங்களை விதித்து அதன் மூலம் நிதியை திரட்டலாமா என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் உரிமை உங்களுக்கு உண்டு! ஆர்பிஐ விதிகள் என்ன?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget