Monkey Attack: 75,000 மதிப்பிலான பணப்பையுடன் அட்டூழியம் செய்த குரங்கு.. சிம்லாவில் நடந்த விநோத சம்பவம்..
சிம்லாவில் பணம் செலுத்த வந்த சந்தாதாரரை அங்கிருந்த குரங்கு தாக்கி ரூ.75,000 மதிப்புள்ள பையை பறித்து சென்றது.
சிம்லாவில் அலுவலகத்தில் பணம் செலுத்த வந்த சந்தாதாரரை அங்கிருந்த குரங்கு தாக்கி ரூ.75,000 மதிப்புள்ள பையை பறித்து சென்றது.
சிம்லாவில் மால் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில், போன் பில் டெபாசிட் செய்ய வந்த சந்தாதாரரை குரங்கு ஒன்று தாக்கியது. அப்போது அவரது கைகளில் இருந்த பையை குரங்கு பறித்துக்கொண்டு தப்பி ஓடியது. அவரது பையில் 75,000 ரொக்கம் பணம் இருந்தது. சமீபகாலமாக இந்த பகுதியில் குரங்குகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.
பையை பிடிங்கிய குரங்கு அந்த அலுவலகத்தின் கூரையில் அமர்ந்து சில ரூபாய் தாள்களை கிழித்து எறிந்தது. இதன் பின் 70,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு சில ரூபாய் நோட்டுகளை கிழித்து எறிந்ததில், சுமார் 4,000 ரூபாய் சேதமடைந்தது.
குரங்குகளின் கைகளில் பணப் பையை பார்த்த பொதுமக்கள் மால் சாலையில் திரண்டனர். குரங்கை அங்கிருந்து வெளியேற்ற மக்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். பின்னர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்ற குரங்குகள் அங்கு சில ரூபாய் நோட்டுகளை கிழித்து எறிந்தன. சிறிது நேரம் கழித்து குரங்குகளும் அங்கிருந்து சென்றன. அதிகாரி மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, 70,000 ரூபாய் நல்ல நிலையில் இருந்தது. ஆனால், 4000 ரூபாய் காணவில்லை, 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் இருந்தது.
டெலிகாம் தொழில்நுட்ப வல்லுநர் முஜீப் ரெஹ்மான் கூறுகையில், குரங்குகளை பயமுறுத்தும் முயற்சியில் ஏர் கன்கள் (air gun)பயன்படுத்தப்பட்டன எனவும் அலுவலக கவுண்டர் வரை அடிக்கடி குரங்குகள் வருவதாகவும் அவர் கூறினார். குரங்குகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Vande Bharat train: வெற்றிகரமாக துவங்கியது வந்தே பாரத் ரயில் சேவை!
PM Modi: கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்!