INS Imphal: இந்தியக் கடற்படையின் அடுத்த சாதனை.. நடுக்கடலில் துல்லியமாக இலக்கை தாக்கிய ஏவுகணை அழிப்பான்..
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இம்பால் போர்க்கப்பலின் முதல் பிரமோஸ் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கடற்படையின் உள்நாட்டு தயாரிப்பில் வடிவமைக்கப்பட்ட இம்பால் போர்க்கப்பல் (யார்டு 12706) - ஏவுகணை அழிப்பான் தனது முதல் பிரமோஸ் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
#WATCH | Imphal (Yard 12706), Indian Navy’s latest indigenous guided missile destroyer, scored ‘Bulls Eye’ in her maiden Brahmos firing at sea.
— ANI (@ANI) November 22, 2023
First ever test-firing of Extended Range Brahmos missile before a ship’s commissioning underscores Indian Navy’s unwavering focus on… pic.twitter.com/hdXFGXS7se
இந்திய கடற்படையின் கூற்றுப்படி, போர்க்கப்பல் மூலம் நீண்ட தூரம் பயணம் செய்து இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை இதுவாகும் என்றும், இது போர் தயார்நிலையில் கடற்படையின் அசைக்க முடியாத கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 'ஆத்மனிபர்தா' மற்றும் கடலில் இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மற்றொரு மைல்கல்லாக உள்ளது என கூறப்படுகிறது.
இம்பால் போர்க்கப்பல் என்பது இந்திய கடற்படையின் (visakapattinam class stealth ) ஏவுகணை அழிக்கும் மூன்றாவது கப்பல் ஆகும். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் (WDB) வடிவமைத்து, மும்பையில் உள்ள Mazagon Dock Shipbuilders Ltd ஆல் கட்டப்பட்டது, INS இம்பால் கப்பல் உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தின் ஒரு அடையாளமாகும். மேலும் இது உலகின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களின் நினைவாக இந்த கப்பலுக்கு இம்பால் என்று பெயரிடப்பட்டுள்ளது.
7,400 டன் எடை மற்றும் 164 மீட்டர் நீளம் கொண்ட ஏவுகணையை அழிக்கும் இம்பால், தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் கொண்ட சக்திவாய்ந்த போர்க் கப்பல் இதுவே ஆகும் எனக் கூறப்படுகிறது. நான்கு எரிவாயு விசையாழிகளை உள்ளடக்கிய (COGAG) இந்த கப்பல் உந்துவிசை தொகுப்பால் இயக்கப்படுகிறது. இது 30 கடல்மைல் (56 கிமீ/ம) வேகத்தை அடையும் திறன் கொண்டது.
இந்த கப்பலில் medium range surface to air missile, அதாவது தரையில் இருந்து வான்வழி தாக்குதலை மேற்கொள்ளும் ஏவுகணைகள் (BEL, பெங்களூர்), பிரம்மோஸ் வான்வழியில் இருந்து வான் இலக்கை நோக்கி தாக்கும் ஏவுகணைகள் (பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், புது டெல்லி), உள்நாட்டு டார்பிடோ குழாய் ஏவுகணைகள் (லார்சன்) நீர்மூழ்கி எதிர்ப்பு உள்நாட்டு ராக்கெட் லாஞ்சர்கள் (லார்சன் மற்றும் டூப்ரோ, மும்பை) மற்றும் 76 மிமீ சூப்பர் ரேபிட் கன் மவுண்ட் (BHEL, ஹரித்வார்) ஆகியவை அடங்கும்.
இம்பால் போர்க்கப்பல் ஏப்ரல் 28, 2023 அன்று முதல் முறையாக சோதனைக்காக கடலில் தனது பயணத்தை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டமாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 6 மாத காலத்திற்குள் இந்த கப்பல் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.