மேலும் அறிய
Advertisement
Ganga River Pollution: கங்கைக்கு சங்கு ஊதும் கொரோனா கவசங்கள் - எச்சரிக்கும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்!
மருத்துவக் கழிவு, மீன்பிடி சாதனங்கள் ஆகிய மட்காத பிளாஸ்டிக் கழிவுகளால், மீன்வளச் சூழல் மாசுபடுத்தியுள்ளதுடன் அவற்றின் வாழிடத்தையும் அழித்துள்ளது என்கிறது ஆய்வு முடிவு
இறந்தவர்களின் உடல்களை கங்கையாற்றில் அப்படியே வீசியெறிவது, கரையோரம் எரிப்பது ஆகியவற்றால், உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் பெரும் சுகாதாரச் சிக்கல் உருவானது. இந்த நிலையில் கொரோனா முகக்கவசம், முழு பாதுகாப்புக் கவசம் ஆகிய மக்காதபொருள்களை முறையாகச் சிதைக்காமல் கங்கையில் போடுவதும் சூழல் அபாயத்தை பெருகச்செய்துள்ளது. அத்துடன் கங்கையாற்றின் உயிரிப்பன்மையத்துக்கும் நீண்டகால பாதிப்பை உண்டாக்கும் என சுற்றுச்சூழல் காப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. மற்ற எல்லா ஆறுகளைப் போலவே கங்கையும் தனித்த சூழலமைப்பைக் கொண்டுள்ளது. நதியில் கொட்டப்படும் கழிவுகளின் அளவு சில மாதங்களாக அதிகரித்துள்ளது. இது, கங்கையின் சூழலமைவுக்கு பெரும் கேடாக மாறியுள்ளது என்கின்றனர் கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய இயக்கத்தினர்.
”ஆற்றங்கரைகளில் சடலங்களை எரிப்பதும் அவற்றை அப்படியே தண்ணீருக்குள் வீசுவதும் நீர் மாசுபடுவதற்கும் தொற்றுக்கும் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இது மட்டுமின்றி ஆற்றில் கொட்டப்படும் மற்ற கழிவுகளும் அவற்றின் மக்காத தன்மையால் அதே அளவுக்கு சமமான அபாயமானது நீண்டகாலத்துக்கு இருக்கும்படி செய்கின்றன” எனக் கூறியுள்ளார், அந்த இயக்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் சசிகாத் சுக்லா.
கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் கவசங்களை எப்படி கையாளவேண்டும் என தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல், கவச உடை, முகக்கவசம், கையுறை மற்றும் பிற கொரோனா மருத்துவக் கழிவுகளை கங்கையாற்றில் கொட்டிவருகின்றனர். எப்படியும் இவை ஆற்றில் நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்கும். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 15 முதல் 20 சதவீதம்வரை கூடுதலான மருத்துவக் கழிவுகள் கங்கையில் கொட்டப்பட்டுள்ளது என்பது ஒரு தரப்பு சுற்றுச்சூழல் வல்லுநர்களின் மதிப்பீடு. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மருத்துவக் கழிவு, மீன்பிடி சாதனங்கள் ஆகிய மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால், மீன்வளச் சூழலை மாசுபடுத்தியுள்ளதுடன் அவற்றின் வாழிடத்தையும் அழித்துள்ளதும் தெரியவந்தது.
கங்கையாற்றின் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரைக் கலப்பதால் ஏற்கெனவே அது கடும்பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இதன் மூலம் நீருக்குள் இருக்கவேண்டிய வரம்பைவிட மிக அதிகமாக- 100 மிலிக்கு 100 மில்லியன் ஆக மனிதக்கழிவுத் துகள் அடர்த்தி பெருகிவிட்டது. இது, குளிப்பதற்குக்கூட லாயக்கு இல்லாததாக கங்கைநீரை மாற்றிவிடும். ஏற்கெனவே மாசுபடுத்தப்பட்டுவரும் ஆற்று நீரை கோவிட் வகையறா கழிவுகள் மேலும் மோசமாக மாசுபடுத்துகின்றன என வருத்தத்துடன் கூறுகின்றனர், கங்கைப் பாதுகாப்பு இயக்கத்தினர். கங்கையாற்றின் முதன்மையான ஓட்டத்தில் கோம்தி, ராம்கங்கா ஆகிய காரியத் தலங்களில் அதிகமாக கழிவுகள் கொட்டப்படுகின்றன. இவை, அந்தப் பகுதிகளில் ஆற்றில் பெரும் மாசுபாட்டை உண்டாக்குகின்றன என்று கூறப்படுகிறது.

அதிகரித்துவரும் இந்த மாசுபாட்டைத் தடுக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளநிலையில், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிங்கள் இதில் தலையிட்டுள்ளன. இந்திய நச்சியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கங்கையாற்று நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இத்துடன், சடலங்கள் வீசப்படும் ஆற்றங்கரைப் பகுதிகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க முடிவுசெய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
ஆன்மிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion