Manipur Violence : "என் மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது; உதவுங்கள்" - பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த மேரி கோம்...!
மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
Manipur Violence : மணிப்பூர் மாநிலத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
”மாநிலம் பற்றி ஏரிகிறது"
இந்த சம்பவம் பற்றி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ”என் மாநிலம் மணிப்பூர் பற்றி ஏரிகிறது; உதவுகள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோரை ட்விட்டரில் டேக் செய்து கலவரமாக இருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவு வேண்டும் என குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் வலியுறுத்தியுள்ளார்.
My state Manipur is burning, kindly help @narendramodi @PMOIndia @AmitShah @rajnathsingh @republic @ndtv @IndiaToday pic.twitter.com/VMdmYMoKqP
— M C Mary Kom OLY (@MangteC) May 3, 2023
இப்படி கலவரமாக இருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடந்து அதன் பின்னணியை பார்க்கலாம்.
மணிப்பூர் கலவரம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிரென் சிங்சிங் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற்று வருகிறது. இம்மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டீஸ் என்ற இன மக்கள் வசித்து வருகின்றனர். மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமூகத்தினர் பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மெஸ்டீஸ் இன மக்களின் கோரிக்கைக்கு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, மணிப்பூர் அனைத்து பழங்குடியின அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் 7 மாவட்டடங்களில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு எதிராக பல இடங்களில் எதிர் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் சவ்ரசந்திரபூர் என்ற இடத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது. இந்த மோதலில் வீடுகள், தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் இருந்த கார்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது. இந்த வன்முறையால் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
8 மாவட்டங்களில் ஊரடங்கு
தற்போது ஏற்பட்டுள்ள பழங்குடி மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையேயான கலவரத்தால் ஐந்து நாட்களுக்கு அம்மாநிலம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் அல்லாத மக்கள் வசிக்கும் பகுதியான இம்பால் மேற்கு, ஜிரிபாம், பிஷ்ணுபூர், காக்சிங், தௌபல் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியான சுராசந்த்பூர், காங்போக்பி, தெங்னௌபால் ஆகிய மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தடுக்க போலீசாரும், ராணவமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கு இடையேயான மோதல் கலவரமாக மாறிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.