Mangalyaan: 6 மாத திட்டம்.. 8 ஆண்டுகள் செயல்பாடு.. விண்வெளியில் செயலிழந்த மங்கள்யான் விண்கலம்..!
இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.450 கோடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி மங்கள்யான் பி.எஸ்.எல்.வி சி25 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து. 8 ஆண்டுகள் முன்பு செவ்வாய் கிரக வெளிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட மங்கள்யானில் தற்போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. மங்கள்யானின் பேட்டரி இப்போது பாதுகாப்பு வரம்பை மீறி செயலிழந்துவிட்டது என்றும், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கொடுத்த தகவல், “மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் தீர்ந்துவிட்டது. அதன் பேட்டரியும் செயலிழந்துவிட்டது. அந்த விண்கலத்துடனான தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது "என்று தெரிவித்தனர்.
Strongly agree with this...last time in June 2021 when we thought that @MarsOrbiter is dead it turned out that @isro had intentionally switched off the payloads. So I will wait till official announcement from @isro .#ISRO #Mangalyaan #MarsOrbiterMission https://t.co/bsVklVI9Nq
— UtpalG (@UtpalGautam5) October 2, 2022
ஆனால் தற்போதுவரை இதுகுறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. கிரகணம் காரணமாக அந்த விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. சமீபத்தில் ஏழரை மணிநேரம் நீடித்த கிரகணங்கள் உட்பட ஒன்றுக்கு ஒன்று என நிறைய நிகழ்ந்தன. செயற்கைக்கோள் பேட்டரி சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே கிரகணத்தை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நீண்ட கிரகணம் ஏற்பட்டதால் பேட்டரி செயல்படும் திறன் குறைந்துவிட்டதாக தெரிகிறது.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையைச் சுற்றி ஆறு மாத காலப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மங்கள்யான், கிட்டதட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் இருந்தது. வெறும் 450 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட இது,பூமியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் அனுப்பப்பட்ட உலகின் நான்காவது விண்வெளி நிறுவனமாக இஸ்ரோ இதை உருவாக்கியது.
Cost of Astrosat: ₹ 180 crore
— Anand Ranganathan (@ARanganathan72) September 9, 2022
Cost of Aditya L1: ₹ 378 crore
Cost of Chandrayaan: ₹ 386 crore
Cost of Mangalyaan: ₹ 447 crore
Cost of Brahmastra: ₹ 450 crore
வரும் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு பயணத்தைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஒரு ஆர்பிட்டராகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்து, 2021 ம் ஆண்டு பதவிக் காலத்தின்போது முன்னாள் இஸ்ரோ தலைவர் கே சிவன், இந்தியாவின் வரவிருக்கும் சந்திரன் பணியான சந்திரயான் -3 ஏவப்பட்ட பின்னரே மங்கள்யான் -2 மேற்கொள்ளப்படும். இரண்டாவது செவ்வாய்ப் பயணம் இன்னும் திட்டமிடல் நிலையிலேயே உள்ளது என்றார்.