Maharashtra : ஃபேஸ்புக் நண்பனிடம் ரூ.22 லட்சத்தினை பறிகொடுத்த பெண்: லாவகமாக பேசி சுருட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!
ஃபேஸ்புக் நண்பனிடம் ரூ. 22 லட்சத்தினை பறிகொடுத்த பெண் ஒருவர் காவல் நிலையத்தினை நாடியுள்ளார்.
மஹாராஷ்ட்ராவில் உள்ள தானே நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் சந்தித்த நபரிடம் ரூபாய் 22 லட்சத்தினை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மாஹாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தினைச் சேர்ந்த 36 வயது பெண். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் சந்தித்த நபரால் ரூ. 22.67 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இது தொடர்பாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆன்லைன் நிர்வாகியாக பணிபுரியும் பெண், பிப்ரவரி 2022 இல் ஒரு ஆணிடமிருந்து நட்புக் கோரிக்கையைப் பெற்றதாக அவர் போலீஸிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர், அந்த நட்புக் கோரிக்கையை அந்த பெண் ஏற்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் அரட்டை அடிக்கத் தொடங்கியுள்ளனர். அதன் பிறகு, ஒருநாள் அந்த நபர் தனது தாயின் சிகிச்சைக்காக தனக்கு அவசரமாக பணம் தேவை என்று கூறினார். அந்தப் பெண் அவனுக்குப் பணம் அனுப்பியுள்ளார்.
பெண்ணின் கூற்றுப்படி இது பல சந்தர்ப்பங்களில் அந்த நண்பர் பணம் கேட்டு பெற்று வந்துள்ளார். அந்த ஃபேஸ்புக் நண்பர் அந்த பெண்ணிடம் இதுவரை ரூ 7,25,000 பணம் கொடுத்துள்ளதாகவும், , ரூ 15,42,688 மதிப்புள்ள நகைகளையும் கொடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி அவர் கேட்டபோது, அவர் அவளைத் தவிர்க்கத் தொடங்கினார். பலமுறை முயற்சித்தும் பனம் கிடைக்காததால், பெண்ணின் வீட்டில் நகை குறித்த கேள்வி குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த பெண் காவல்துறையை அணுகி உள்ளார்.
மும்பை தானே நகர் பகுதியில் உள்ள வர்தக் நகர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்ட்ராவில் நடந்த மற்றொரு சம்பவம்...
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வேகமாகச் சென்ற பேருந்து டிரக் மீது மோதியதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான ஷிர்டியை நோக்கி சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள நாசிக்கின் சின்னார் தாலுகாவில் உள்ள பதரே ஷிவார் அருகே காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர்களில் 7 பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சின்னார் கிராமப்புற மருத்துவமனை மற்றும் சின்னாரில் உள்ள யஷ்வந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.