மேலும் அறிய

ஒரு மாவட்டமே மோசடியில் சிக்கியது எப்படி?... மக்களை காப்பாற்றப் போவது யார்?

சமூக வலைதளங்களில் வலம்வரும் கிராமப் புறங்களை சேர்ந்தவர்களை குறிவைத்து இணையவழி மோசடி கும்பல் மோசடியை அரங்கேற்றி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் இணையவழி மோசடி

ஒவ்வொவொரு நாளும் இணைய வழியில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து தடுத்து வந்தாலும் சைபர் குற்றங்கள் அதிகரித்துதான் வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இணைய வழியில் பல்வேறு விதமாக மோசடிகள் நடக்கின்றன. இதில் படித்த இளைஞர்கள்தான் சிக்கி கொள்கிறார்கள்.

ஆன்லைன் ஆஃப் மூலம் மோசடி 

ஆன்லைன் ஆப் மூலம் வேலை உள்ளது. இதில் உங்களுக்கு இரு மடங்காக வருவாய் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி வாங்குங்கள், இந்த டாஸ்க்கை முடித்தால் ஏகப்பட்ட பணம், பிட் காயினில் அதிக வருமானம் என்று பல்வேறு இணைய வழி மோசடி நடக்கிறது.

கிராமப்புற மக்களை குறிவைக்கும் இணையவழி மோசடி கும்பல் 

சமூக வலைதளங்களில் வலம்வரும் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்களில் சற்று வசதியாக உள்ளவர்களின் விவரங்களை ‘இணையவழி திருடர்கள்’ சேகரிக்கின்றனர். அவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து கொண்டு ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்து வருகிறார்கள்.

விழுப்புரத்தில் நடைபெற்ற மோசடி விவரம்:- 
 

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 916 அளவுக்கு மோசடி செய்யப் பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரூ.21 லட்சத்து 26 ஆயிரத்து 305 முடக்கப்பட்டது. இவற்றில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 813 மீட்கப்பட்டு புகார் தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு ரூ. 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 661 மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில், ரூ.1 கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 38 பணம் முடக்கப்பட்டது. இதில், ரூ. 20 லட்சத்து 6 ஆயிரத்து 13 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 93 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. தொடர் விசாரணையில் புகாரில் குறிப்பிட்ட பண அளவைத் தாண்டி ரூ. 4 கோடியே 82 லட்சத்து 30 ஆயிரம் முடக்கப்பட்டது. இதில், ரூ.18 லட்சத்து 3 ஆயிரத்து 22 மீட்கப்பட்டு புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2024-ம் ஆண்டு நிலவரம் சைபர் க்ரைம் போலீசில் கடந்தாண்டு மட்டும் 93 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

இப்புகாரின் மூலம் ரூ.10 கோடியே 96 லட்சத்து 89 ஆயிரத்து 779 பணத்தை புகார்தாரர்கள் இழந் துள்ளனர். இத்தொகையில் ரூ.10 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 575 அளவிலான தொகை முடக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் வடக்கு சரகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 491 பணம் மீட்கப்பட்டு உரியவர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கம்போடியா, தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற 3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமான தொகை அதிகரித்து வருவதை புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

ஒவ்வொரு நாளும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதில் அதிகமாக இளைஞர்கள் பள்ளி மாணவ மாணவிகள் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பு ஆன்லைன் டிரேடிங் உள்ளிட்டவற்றின் சிக்கிக் கொள்கின்றனர். telegram இல் டாஸ்க் முடித்தால் இரண்டு மடங்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குவிந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget