மேலும் அறிய

Thiruparankundram: அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலிகடா - செல்லூர் ராஜூ காட்டம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை - செல்லூர் ராஜூ

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுக மீது களங்கம் சுமத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் பலி கடா ஆக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் எனவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
அ.தி.மு.க.,வினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
 
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் அதிமுக பிரதிநிதி பங்கேற்று, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கையெழுத்திடவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில்,"திருப்பரங்குன்றம் சட்டம் ஒழுங்கு மக்கள் பிரச்னையில் மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது, அமைதிப் பேச்சுவார்த்தையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டது வேதனை அளிக்கிறது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண்பழி சுமத்துகிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைக்காமல் உண்மைக்கு புறம்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ராஜன் செல்லப்பா பேட்டி
 
பின்னர் ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில், "திருப்பரங்குன்றம் மக்கள் பிரதிநிதியான என்னை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக பங்கேற்றுள்ளதாக பொய்யான தகவலை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். ஆளுங்கட்சி தூண்டுதலின் காரணமாக அதிமுக மீது மாவட்ட ஆட்சியர் வீண் பழி போட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்ப பெற வேண்டும். யாரோ எழுதி அனுப்பிய அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார், மாவட்ட ஆட்சியர் அறிக்கை திரும்பப் பெறாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். யாரோ சொன்னதால் தான் அறிக்கையில் அதிமுக பேரை குறிப்பிட்டுள்ளேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலைக்கோவில் வழிபாடு விவகாரத்தில் 3 ஆண்டுகளாக பிரச்னை நடைபெற்று வருகிறது. நிர்வாகம் சரியாக இருந்திருந்தால் திருப்பரங்குன்றத்தில் பிரச்னை இருக்காது, மாவட்ட ஆட்சியர் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முறையாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு வந்த அழுத்தத்தின் காரணமாகவே அறிக்கையில் அதிமுக குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் நிலைப்பாடு குறித்து கூற முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார்" என கூறினார். 
 
செல்லூர் ராஜூ பேட்டி
 
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது. தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைகளுக்கும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. தமிழகத்தில் உளவுத்துறை என்ன செய்கிறது? தமிழ்நாடு அரசு செயல்படாத அரசாக உள்ளது. முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு ஆட்சியரை பலிகடாக ஆக்கி உள்ளது" என கூறினார்
 
தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget