IND vs ENG 1st ODI: முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி - 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
IND vs ENG 1st ODI INdia Won: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் களமிறங்கியது. ஆனால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, அந்த தொடரை 4-1 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி இன்று (06.02.2025) நடைபெற்றது.
மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி முதல் போட்டியில் விளையாடவில்லை.
இந்தியாவுக்கு 249 ரன் இலக்கு:
50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75 ரன் ஸ்கோர் போர்ட்டில் சேர்த்தனர்.இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது
அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பென் டக்கெட் 32 ரன்கள், ஜோ ரூட் 19 ரன் மற்றும் ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பென் டக்கெட், ஹாரி ப்ரூக் இருவரின் விக்கெட்களையும் அறிமுக நாயகன் ஹர்ஷித் ராணா எடுத்தார்.
இவர்களை தொடர்ந்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் (52) மற்றும் ஜேக்கோப் பெத்தேல் (51) ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரிரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்த களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் படேல் மூவரும் தலா 1 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இந்தியா அணி வெற்றி:
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிதாக ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர். ரோஹித் சர்மா 2 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியா 19 ரன்னுக்கு 2 விகெட்களை இழந்தது. அடுத்து வந்த. இதனையடுத்து, ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரின் கூட்டணியும் அணியை 110 ரன் எடுக்க வைத்தனர். அதிரடியாக விளையாடிய கில் 9 பவுண்ரி, 2 சிக்ஸர் என 36 பந்தில் 59 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய பேட்டஸ்மென்கள் இன்னிங்க்ஸ் முழுவதும் நிதானமாக பவுண்ட்ரிகளை அடித்து விளையாடினர். ஷுப்மன் கில்லுடன் இணைந்த அக்ஷர் படேல் இருவரும் சிறப்பாக விளையாடினர்.
அக்ஷர் படேல் அரைசதம் அடித்தார். அவர் 47 பந்துகளில் 6 பவுண்ரி 1 சிக்ஸர் அடித்து 52 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்க்கு இந்தியா 225 ரன் எடுத்திருந்தது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் 96 பந்துகளில் 14 பவுண்டரிகள் அடித்து 87 ரன் எடுத்து சாக்யூப் மஹ்முத் பந்தில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 2 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 9 ரன், ஜடேஜா 12 ரன்னுடன் இருவரும் களத்தில் இருந்தனர்.இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் மற்றும் சாக்யூப் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளும் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கோப் பெத்தேல் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இந்திய அணி 38.4 ஓவரில் 251 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். விக்கெட் வீழ்ந்தாலும் கில், அக்ஸார் படேல் இருவரின் பார்ட்னர்ஷிப் ஸ்கோரை உயர்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி ஒடிசாவில் உள்ள Barabati மைதானத்தில் நடைபெறுகிறது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

















