மேலும் அறிய

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி.. சாட்டையை சுழற்றிய காங்கிரஸ் தலைவர் கார்கே!

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட குறிப்பிட்ட மாநிலங்களில் மோசமான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியும் தந்தது. கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. 

350 இடங்களுக்கு மேல் பாஜக பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டாலும், பாஜகவால் தனிப் பெரும்பான்மையை கூட பெற முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி அமைத்துள்ளது. 

காங்கிரஸ் படுதோல்வி அடைந்த மாநிலங்கள்: கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 99 இடங்களில் வென்றுள்ளது. அதோடு மூன்று சுயேச்சைகள் அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். 

கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மோசமான தோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் அக்கட்சியால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. கர்நாடகாவில் 28 தொகுதிகளில் ஒன்பது இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. 

காங்கிரஸ் தலைவர் அதிரடி நடவடிக்கை: அதேபோல தெலங்கானாவில் 17 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை கைப்பற்றியது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

சத்தீஸ்கரில் 11 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அக்கூட்டணிக்கு 7 தொகுதிகளிலும் தோல்வியை மிஞ்சியது. உத்தராகாண்டில் 5 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட குறிப்பிட்ட மாநிலங்களில் மோசமான தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளார். 

மத்திய பிரதேச தேர்தல் தோல்வி குறித்து ஆராய பிரித்திவிராஜ் சவுகான், சப்தகிரி உலாகா, ஜிக்னேஷ் மேகானி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் தேர்தல் தோழி குறித்த ஆராய விருப்பு மொயலில் ஹரிஷ் சவுத்ரி கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஒடிசா தேர்தல் தோல்வி குறித்து ஆராய அஜய் மகான் தாரிக் கன்வர் ஆகியர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் கே சி வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget