11 ஆண்டுகளில்.. 1.47 லட்சம் கி.மீ. நீளமுள்ள சாலைகள்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் இந்தியா
கடந்த 11 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் 1.47 லட்சம் கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது 2014-ம் ஆண்டுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட நீளத்தைக் காட்டிலும் 60% கூடுதல் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் சமூக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தரமான சாலைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
"தரமான சாலைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்"
கடந்த 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் இலக்குகளை எட்டுவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: டெலிவரி பொருட்களை கொடுக்க வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்திய சாலைகள் பேரமைப்பின் 233-வது இடைக்கால கவுன்சில் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் லால்துஹோமா, மாநில அமைச்சர் வன்லால்ஹ்லானா, நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் வன்லால்மங்கைஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்ன சொன்னார் மத்திய அமைச்சர்?
கடந்த 11 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் 1.47 லட்சம் கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது 2014-ம் ஆண்டுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட நீளத்தைக் காட்டிலும் 60% கூடுதல் என்றும் அவர் கூறினார். உலகின் தலைசிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் சாலைகளின் கட்டுமானச் செலவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
MoS Harsh Malhotra (@hdmalhotra) emphasised on socio-economic impact of infrastructure; states that good and robust road network brings prosperity, addressing at the 233rd Mid-Term Council Meeting of the Indian Roads Congress (IRC) at Mizoram University Campus in Aizawl… pic.twitter.com/xUTFKSquUp
— PIB India (@PIB_India) June 20, 2025
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய சாலைக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.
இதையும் படிக்க: Crime : மயக்க மருந்து இன்றி.. கட்டாயப்படுத்தி.. 32 பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை.. பதைபதைக்க வைத்த கொடூரம்..




















