Maruti eVitara: முதல் EV கார்னா சும்மாவா.. யூரோப்பியன் டச்,மொத்த வித்தையையும் இறக்கிய மாருதி - விலையிலும் ட்விஸ்ட்
Maruti eVitara: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது முதல் மின்சார காரான இ - விட்டாராவில் ஏராளமான அம்சங்கள் மற்றும் வசதிகளை மாருதி நிறுவனம் அள்ளிக் கொடுத்துள்ளது.

Maruti eVitara: மாருதி நிறுவனத்தின் முதல் மின்சார காரான இ - விட்டாரா, பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் மற்றும் 543 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி இ -விட்டாரா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தால் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள, முதல் மின்சார காரான இ-விட்டாரா அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு சர்வதேச நாடுகளுக்கு ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்படும் இந்த காரானது, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி மூலம், தங்களது முதல் மின்சார கார் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றதையும், மின்சார வாகனங்களில் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் மாருதி அறிவித்துள்ளது.
இ-விட்டாராவில் Baas விலை முறை:
மாருதி சுசூகி நிறுவனம் இ விட்டாரா மூலம், சேவை அடிப்படையில் பேட்டரி (Batter As A Sevice) என்ற Baas திட்டத்தின் அடிப்படையில் காரின் விலையை நிர்ணயிக்க உள்ளதாம். இதில் சந்தா சேவையும் வழங்கப்பட உள்ளதாம். அதன்படி, பேட்டரியை சொந்தமாக வாங்காமலேயே, காருக்கான விலையை மட்டும் கொடுத்து உரிமையாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் மலிவு விலையில் காரை வாங்கி, வாடகை அடிப்படையில் பேட்டரியை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக ஆயிரத்து 100 நகரங்களில் 2000 சார்ஜிங் மையங்களை அமைக்க மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் பொது சார்ஜிங் மையங்களை அமைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இன் ஜின் பிரிவில் ஆதிக்கம் செலுத்துவது பொன்றே மின்சார கார் பிரிவிலும் கோலோச்ச, ஒவ்வொரு 5 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் ஒரு சார்ஜிங் மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இ-விட்டாரா பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய பல மேம்படுப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள், ப்ராண்டின் முதல் மின்சார காரில் நிரப்பப்பட்டுள்ளன. இதனால இந்த செக்மெண்டில் இடம்பெறும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகவும் உள்ளது. புதிய கார்களுக்கான பாரத் கார் பரிசோதனையில், பெரியவர் மற்றும் சிறுவர்கள் என இரண்டு பிரிவிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்காக
- 7 ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது
- லெவல் 2 - ADAS
- ஹை டென்சைல் ஸ்ட்ரெந்த் ஸ்டீல் ஸ்ட்ரக்ட்சர்
- டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம்
- 30 டிகிரி வியூ கேமரா
- ஃப்ரண்ட் & ரியர் பார்கிங் சென்சார்கள்
- ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக்
- 4 சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்
வசதிகள் இந்த காரில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இ-விட்டாரா - வெளிப்புற அம்சங்கள்
கவனத்தை ஈர்கக் கூடிய வெளிப்புற அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- ஏரோ டிசைனுடன் கூடிய 18 இன்ச் அலாய் வீல்கள்
- ஆட்டோ ஃபோல்டுடன்கூடிய பவர்ட் ORVM
- எல்இடி முகப்பு விளக்குகள்
- ஃபாக் லைட்ஸ்
- அடாப்டிவ் ஷட்டர்களுடன் கூடிய ஸ்மார்ட் க்ரில்
- ரூஃப் எண்ட் ஸ்பாய்லர்
- முன்புற இடது ஃபெண்டரில் சார்ஜிங் போர்டர்
இ-விட்டாரா - உட்புற வசதிகள்
உட்புறத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து கார்களையும் காட்டிலும் இ -விட்டாரா மேம்பட்டதாக உள்ளது. இந்த பிரிவில் மிகவும் மேம்பட்டதாகவும், யூரோப்பியன் வடிவமைப்பை கொண்டதாகவும் தெரிகிறது. இதற்காக
- 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல்
- ஃபிக்ஸ்ட் க்ளாஸ் ரூஃப்
- ட்விண்டெக் ஃப்ளோட்டிங் செண்டர் கன்சோல்
- ஆம்பியண்ட் லைட்டிங்
- ஹர்மன் ஸ்பீக்கர்கள் மூலம் ப்ரீமியம் இன்ஃபினிட்டி ஆடியோ வசதி
- 10.1 இன்ச் ஃப்ரீ ஸ்டேண்டிங் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன்
- 10.25 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே
- வயர்லெஸ் சார்ஜிங் பேட்
- ட்ரைவ் மோட், ரிஜென் மோட், ஸ்னொ மோட்
- வெண்டிலேயட் ஃப்ரண்ட் சீட்ஸ்
- 10-வே பவர்ட் ஒட்டுனர் இருக்கை
- ஸ்லைடிங் & ரிக்ளைனிக் ரியர் இருக்கை
- 40:20:40 ட்ரிபிள் ஸ்ப்ளிட் ரியர் இருக்கை
- PM 2.5 ஏர் ஃபில்டர்
- ஸ்மார்ட்வாட்ச் இண்டக்ரேஷனுடன் கூடிய அட்வான்ஸ்ட் டெலிமேடிக்ஸ்
இ-விட்டாரா - பேட்டரி விவரங்கள்
இ விட்டராவில் லித்தியம் அயர்ன் பேட்டரி இரண்டு வடிவங்களில் வழங்கப்படும் என்பதை மாருதி சுசூகி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி சிறிய வேரியண்ட்களில் முன்புற சக்கரங்களில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் 144PS மற்றும் 193Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 49KWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதேநேரம், டாப் எண்ட் வேரியண்ட்களில் முன்புற சக்கரங்களில் ம்ட்டுமே பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் 174PS மற்றும் 193Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 61KWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என மாருதி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















