ஜூன் 20ஆம் தேதி சேகர் கம்முலாவின் குபேரா திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தனுஷின் திரைக்கு மறுபிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது
தனுஷின் ஆரம்ப கால படங்களை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கினார். இன்று ஒரு சிறந்த நடிகராக தனுஷ் இருப்பதற்கு இந்த படங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன என்று சொல்லலாம்
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த படம் மாரி. மாஸான ஆக்ஷன், காமெடி என தனக்கேன ஒரு தனி டிராக்கில் தனுஷ் பயணித்தார்
வெற்றிமாறன் இயக்கிய இந்த படம் மொத்தம் ஆறு தேசிய விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் வென்றார்
தனுஷின் கரியரில் எல்லா காலத்திற்கும் பேசப்படும் ஒரு படமாம வடசென்னை என்றும் இருக்கும். இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என தனுஷ் சமீபத்தில் தெரிவித்தார்
கொரோனா ஊரடங்கிற்கு பின் திரையரங்கிற்கு மீண்டும் மக்கள் குடும்பத்தோடு சென்ற பார்த்த படம் திருச்சிற்றம்பலம். பெரியளவில் வரவேற்பு இல்லாமல் வெளியான திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிபெற்றது
தற்போது தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா ஜிப் சார்ப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதிகாரம் உள்ளவர்களுக்கும் ஒரு சாமானியனுக்கும் இடையில் நடக்கும் மோதலே குபேரா படத்தின் மையக் கதை
தனுஷின் முந்தைய படமான ராயன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வகையில் குபேரா வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெரியளவில் வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
ஜூன் 20 ஆம் தேதி குபேரா திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது