‛எனக்கு இது தான் பிடிக்கும்’ ; சுற்றுச்சூழல் தினத்தில் கஞ்சா நடவு செய்த இளைஞருக்கு வலை வீச்சு!
சுற்றுச்சூழல் தினத்தன்று சாலையோரம் கஞ்சா செடி நட்ட இளைஞரை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ம் தேதியை உலக நாடுகள் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது. 3 தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தை திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாடினர். பலர் தங்களது மரக்கன்று விழிப்புணர்வை புகைப்படமாகவும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து பாராட்டுகளை பெற்றனர். ஆனால் சுற்றுச்சூழல் தினத்தன்று சாலையோரம் செடி நட்ட இளைஞரை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செடி நட்டதில் என்ன தவறு என்று தோன்றுகிறதா? அந்த இளைஞர்கள் நட்டது கஞ்சா செடி.
உலகமே சுற்றுச்சூழல் தினத்தன்று தங்களுக்கு பிடித்தமான செடிகளை நடுகின்றனர். நாங்களும் எங்களுக்கு பிடித்தமான செடியை நடுவதாக கஞ்சா செடியை நட்டு சென்றுள்ளனர் அந்த கஞ்சா இளைஞர்கள். செடிகளுக்கு முன்பு வீடியோ எடுத்து அதனை சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளனர்.
எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சூப்பர் மொறு மொறு ஏர்ஃபிரை காளான்!
கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கண்டசிரா கிராமத்தில் இந்த கஞ்சா செடி விவகாரம் நடந்துள்ளது. சோஷியல் மீடியாவில் பரவிய வீடியோவை பார்த்து அதிர்ந்த கொல்லம் போலீசார் இடத்தை தேடிப் பிடித்து கஞ்சா செடியை பிடுங்கியுள்ளனர். ஒரு அடி நீளம் மற்றும் இரண்டு அடி நீளம் என 2 கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சா செடி கையில் சிக்கினாலும் வீடியோவில் வீர வசனம் பேசிய இளைஞர்கள் தப்பித்துவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.கண்டசிரா பகுதியில் மட்டுமல்ல, மங்கத் பைபாஸ் பாலத்திற்கு கீழேயும் கஞ்சா செடிகள் நடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அங்கே சென்று போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் எந்த கஞ்சா செடியும் சிக்கவில்லை. அதேவேளையில் அந்த பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதற்காக தடயங்கள் இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்
இது குறித்து பேசிய காவல் அதிகாரி சுரேஷ், ஊரடங்கு காலத்தால் கஞ்சா கிடைக்காமல் திணறும் கஞ்சா கும்பல் இந்த புதிய வேலையை தொடங்கியுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
சுற்றுச்சூழல் தினம் என்ற கணக்கெல்லாம் இல்லை. நம் பூமியை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதனை பாதுகாப்பது மிக முக்கியம். மரம் நடுவதே பூமிக்கும் நமக்கு மிக நல்லது. அதற்கு தினம் தினம் கூட நாம் மரம், செடிகளை நடலாம். அதற்காக சட்டத்திற்கு புறம்பான போதை செடிகளை நட்டால் சிறையில் கம்பி எண்ணுவது நிச்சயம் என எச்சரிக்கின்றன போலீசார்.
தடுப்பூசி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கேள்விகளும், அரசின் கொள்கை மாற்றமும் !