மேலும் அறிய

Lingayat Seer : லிங்காயத் மடாதிபதி பசவலிங்க ஸ்வாமி தற்கொலை என தகவல்.. 2 பக்க கடிதத்தில் இருந்தது என்ன?

லிங்காயத் மடத்தின் 44 வயதான பசவலிங்க சுவாமி தலைமை பொறுப்பில் இருந்தவர் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

கர்நாடக மாநிலம் ராமநகரத்தில் லிங்காயத் மடத்தின் சீடர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடகா மாநிலத்தில் பிரபலமான முருகமடம் உள்ளது. இந்த மடத்தின் 44 வயதான பசவலிங்க சுவாமி தலைமை பொறுப்பில் இருந்தவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

திங்கள்கிழமை காலை அவர் கதவைத் திறக்காததால், பக்தர்கள் அவரது அறையின் கதவை உடைத்துத் திறந்தபோது இறந்து கிடப்பதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அவரை பதவியில் இருந்து நீக்க சிலர் விரும்புவதாகக் கூறி இரண்டு பக்கக் குறிப்பை மடாதிபதி விட்டுச் சென்றதாக போலீஸார் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். லிங்காயத் பிரிவை 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் நடைமுறையில் கொண்டு வந்தார், ''வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. லிங்காயத்தை பின்பற்றுபவர்கள் தங்களை வீர சைவர்கள் என்று அழைத்து கொள்வர். இவர்கள் தங்களோடு எப்போதும் லிங்கத்தை உடன் வைத்திருக்க வேண்டும், லிங்கத்தை கைகளில் வைத்து பூஜிக்க வேண்டும், குழந்தை பிறந்ததும் லிங்கத்தை கழுத்தில் தொங்கவிட வேண்டும் என்பது பசவண்ணா உருவாக்கிய கோட்பாடுகள். அதோடு அசைவம் உண்ணக்கூடாது, மது அருந்தக்கூடாது போன்றவை பசவண்ணா உருவாக்கிய கொள்கைகள். சாதிகளை வைத்து மக்கள் பிரிக்கக்கூடாது என்றார். விதவை திருமணத்தை ஆதாரித்தார், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும்” என்றார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர்.லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் 2018 கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் சுமார் 17% பேர் லிங்காயத் மதத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து லிங்காயத்தை தனிமதமாக அறிவித்தனர்.

 கர்நாடகாவின் ராமநகர மாவட்டத்தில் 44 வயதான லிங்காயத் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பசவலிங்க சுவாமி சீடர் திங்கள்கிழமை அவரது அறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். மேலும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். திங்கள்கிழமை காலை அவர் கதவைத் திறக்கவில்லை என்றும், பலமுறை தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் அங்கு இருக்கும் சீடர்கள் தெரிவித்தனர். 25 வருடங்களாக லிங்காயத் மடத்திற்கு தலைமை தாங்கிய அவர், தன்னை பதவியில் இருந்து நீக்க விரும்பும் சிலர், தன்னை துன்புறுத்தியதாக இரண்டு பக்க குறிப்பை விட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

அவதூறு மற்றும் அச்சுறுத்தும் வகையில், துன்புறுத்தப்படுவதாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், மடாதிபதிகள் தங்கள் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறும் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இவரின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs MI LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் இழப்பு..திணறும் கொல்கத்தா!
KKR vs MI LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் இழப்பு..திணறும் கொல்கத்தா!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs MI LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் இழப்பு..திணறும் கொல்கத்தா!
KKR vs MI LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் இழப்பு..திணறும் கொல்கத்தா!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"B ஃபார் பாபு, J ஃபார் ஜெகன், P ஃபார் பவன்" ஆந்திரா பார்முலாவை கையில் எடுத்த ராகுல் காந்தி!
Embed widget