(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: ‛இனி நான் தமிழ்ல பேசுறேன்... புரியுதா..’ குட்டு வைத்த கனிமொழி எம்.பி!
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு குட்டு வைக்கும் விதமாக கனிமொழி எம்.பி. பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு குட்டு வைக்கும் விதமாக கனிமொழி எம்.பி. பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மக்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம் பற்றி பேச முற்பட்டார். அப்போது அவர் ஆத்ம நிபார் என்பதை உச்சரிக்க சிரமப்பட்டார். உடன் இருந்த எம்.பி.க்கள் எடுத்துக் கொடுக்க, அவர் சுதாரித்துக் கொண்டு மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு ஒரு குட்டு வைத்தார்.
அவர் பேசும்போது, பாருங்கள் இது தான் இங்கு பிரச்சனை. இந்தியா பல மொழிகளைப் பேசும் நாடு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள தவறிவிட்டீர்கள். நீங்கள் இப்படியான திட்டத்திற்கு ஒன்று ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் இல்லையென்றால் பிராந்திய மொழிகளில் அனைவரும் எளிதில் உச்சரிக்கும்படி பெயர் வைக்க வேண்டும். சரி நான் இங்கு தமிழில் பேசுகிறேன். நீங்கள் புரிகிறதா என்று பாருங்கள். ஆனால், அதற்கு மட்டும் முன் அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள் என்றார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் சபாஷ் தெரிவித்து மேஜையைத் தட்டினர். அரங்கமே சில் விநாடிக அதிர்ந்தது.
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு குட்டு வைக்கும் விதமாக கனிமொழி எம்.பி. பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ... சரியாக 23:50 வது நிமிடத்தில் அந்த உரையாடல் வருகிறது...!
அதென்ன ஆத்ம நிர்பார் பாரத் அபியான்?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு சமமான ரூ 20 லட்சம் கோடி மதிப்பில் விரிவான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி 12 மே, 2020 அன்று அறிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் அபியான் எனப்படும் சுய-சார்பான இந்தியா இயக்கத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகிய சுய-சார்பான இந்தியாவின் ஐந்து தூண்களையும் அவர் குறிப்பிட்டார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ 40,000 கோடி அதிகரிப்பு.
* வருங்கால பெருந்தொற்றுகளுக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் வகையில் பொது சுகாதாரத்தில் முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் இதர சுகாதாரச் சீர்திருத்தங்கள்.
* கோவிட்டுக்குப் பிறகு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கல்வியை மேம்படுத்துதல்.
* திவால் மற்றும் நொடித்தல் குறியீடு சார்ந்த நடவடிக்கைகள் மூலம் தொழில் செய்வதை சுலபமாக்குவது.
* நிறுவனங்கள் சட்டத்தின் வழுவுதல்களை குற்றமற்றதாக்குதல்.
* பெரு நிறுவனங்கள் தொழில் செய்வதை சுலபமாக்குதல்.
* புதிய, சுய-சார்பான இந்தியாவுக்காக பொதுத் துறை நிறுவனங்கள் கொள்கை வகுத்தல்.
* 2020-21க்கு மட்டும் மாநிலங்களின் கடன் வாங்கும் அளவை மூன்று சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக அதிகரித்தல், மாநில அளவிலான சீர்திருத்தங்களை ஊக்குவித்தல்.
இவையே அவற்றின் சிறப்பம்சங்கள்.