JP Nadda: ”பாஜக ஆளாத மாநிலங்களில் வன்முறை அதிகரித்துள்ளது”- ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா, பாஜகவினர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இளையராஜாவை அவமானப்படுத்துவதா என பாஜக தலைவர் ஜே.பி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலத்தில், பா.ஜ.க. மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிப் புரியாத மாநிலங்களான, தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிஷா, ஜார்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.க.வினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளாதவும், இந்த மாநிலங்களில் உள்ள கட்சிகள் கீழ்தரமான அரசியல் செய்து வருகின்றனர். என்று தெரிவித்துள்ளார். மேலும், அறிக்கையில், பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் நடந்த வன்முறை நிகழ்வுகளை பட்டியலிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவினர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைபடுவார் என இசைஞானி இளையராஜா எழுதியதாக கூறப்படும் வரிகளுக்கு ஆதரவும், தற்போது கடும் எதிர்ப்பும் கிளம்பிவருகிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள், ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல், நாட்டின் மிக உயர்ந்த இசைக்கலைஞரான இளையராஜாவை அவமானப்படுத்திவருகிறார்கள். தாங்கள் சார்ந்த கட்சி விரும்பாத கருத்தைக் கூறிய ஒரே காரணத்திற்காக அவரை அவமானப்படுத்துவதா? இது ஜனநாயகமா? வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும், இணைந்து வாழமுடியும் என்பதே ஜனநாயகம்" என தெரிவித்திருக்கிறார்.
மேலும், அறிக்கையில், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாதா மாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் குறித்து, வாக்கு வங்கியை பற்றி பேசும் நீங்கள், ராஜாஸ்தானில் நடந்த வன்முறை சம்பவங்களை மறந்துவிட்டீர்களா? இதுபோன்ற வன்முறைகள் நடக்கும்போது, நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? நீங்கள் அமைதியாக இருப்பதற்கான கட்டாயம் என்ன? 1996 ஆம் ஆண்டு பசு வதையை தடை செய்யக்கோரி நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்திய இந்து சதூஸ் மீது இந்திரா காந்தி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள். இவர்கள் ராஜீவ் காந்தியின் சொன்ன வார்த்தைகளான, ஓர் மரம் சாய்ந்தால், இந்த பூமியே நடுக்கும்’ என்பதை மறந்தவர்கள் ஆயிரக்கணக்கான சீக்கியர்களின் படுகொலைக்கு நியாயம் கற்பிக்கிரார்கள். 1969ல் குஜாராத், 1980ல் மோரடாபாத், 1980ல் பிவாந்தி, 1984-ல் மீரட், 2012ல் முஷாஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பல நிகழ்வுகல் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சாட்சி. இதுபோன்ற பல்வேறு தாக்குதல்கள் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்துள்ளது.” என்றார்.
BJP Pres JP Nadda writes to country citizens to "think ahead & plan for how we all feel the nation must be when we mark 100 years of Independence in 2047."
— ANI (@ANI) April 18, 2022
"Youth of India want opportunities not obstacles & urge opposition to embrace politics of development," he further writes pic.twitter.com/ljYXOnQh8F
இந்நிலையில், சென்னையில் செய்தியாள்ர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, "இளையராஜாவின் கருத்தை இடதுசாரிகள், எதிர்க்கட்சிகளால் ஏன் ஏற்க முடியவில்லை. கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள்தான் இளையராஜாவின் கருத்தை எதிர்கின்றனர்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, இதுதொடர்பாக இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கருத்து கூறியுள்ளார். இதுதொடர்பாக கங்கை அமரன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என இளையராஜா கூறினார். தனக்கு எதிரான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாகவும் என்னிடம் இளையராஜா கூறினார். மற்றவர்கள் எப்படி கருத்து கூறுகிறார்களோ அதேபோல்தான் கருத்தைக் கூறினேன் என்றார். தான் பதவி வாங்குவதற்காக மோடியை புகழவில்லை. தான் காட்சிக்காரர் இல்லை என்றும் கூறினார். அம்பேத்கரையும் பிடிக்கும், மோடியையும் பிடிக்கும். அதனால் ஒப்பிட்டு பேசினேன் என்று இளையராஜா கூறினார்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்