மேலும் அறிய

Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...

செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன.

நாட்டில் தற்போது செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ரீசார்ஜ் செய்யும்போது, டேட்டாவுடன் கூடிய பிளான்கள் மட்டுமே உள்ளன. டேட்டா தேவைப்படாமல், வாய்ஸ் கால் மட்டும் பேச விரும்பும் சில வாடிக்கையாளர்கள் டேட்டாவிற்கும் சேர்த்தே பணம் கட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், டிராய் உத்தரவின் பேரில், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன.

TRAI போட்ட உத்தரவு என்ன.?

கடந்த ஆண்டின் இறுதியில், TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், டேட்டா பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில் ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்த வேண்டும், அதையும் ஒரு மாதத்திற்குள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. டிராயின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது, முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், புதிய பிளான்களை வெளியிட்டுள்ளன.

ஜியோ அறிமுகப்படுத்திய புதிய வாய்ஸ் ஒன்லி பிளான்கள்

ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளானின்படி,

  • 458 ரூபாய் ரீசார்ஜ் - 84 நாட்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்ஸ்-கள் இலவசம். ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆப்-ஐ பயன்படுத்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
  • 1,958 ரூபாய் ரீசார்ஜ் - 365 நாட்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 3,600 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள பிளான்கள்

ஜியோ போலவே, ஏர்டெல் நிறுவனமும் 2 வாய்ஸ் ஒன்லி பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,

  • 509 ரூபாய் ரீசார்ஜ் - 84 நாட்கள் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 900 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.
  • 1,999 ரூபாய் ரீசார்ஜ் - 1 வருடத்திற்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ்-கள் இலவசம்.

இந்த இரண்டு நிறுவனங்களின் இரண்டு வாய்ஸ் ஒன்லி பிளான்கள், டேட்டா பயன்படுத்தாமல், வாய்ஸ் கால்களை மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget