Jeet Adani Diva Shah Wedding: சர்ச்சைக்கு பெயர் போன கவுதம் அதானி - மகன் ஜீத்திற்கு திவா உடன் திருமணம் - இடம், விருந்தினர்கள் முழு விவரம் இதோ..!
Jeet Adani Diva Shah Wedding: நாட்டின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான, கவுதம் அதானியின் மகனிற்கு நாளை கோலகலமாக திருமணம் நடைபெற உள்ளது.

Jeet Adani Diva Shah Wedding: நாட்டின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான, கவுதம் அதானியின் மகனின் திருமணம் தொடர்பான முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கவுதம் அதானியின் மகன் திருமணம்:
நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், முக்கிய தொழில் நிறுவனமான அதானி குழுமத் தலைவருமான, கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானியின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இத்திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. இதில், வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷாவை, ஜீத் கரம்பிடிக்க உள்ளார். ஜனவரி 2025 இல் அதானி குழுமத்தின் தலைவர் தேதியை உறுதி செய்ததிலிருந்து இந்தத் திருமணம் தொடர்பான பேச்சுகள் வேகமெடுத்தன. அதேநேரம், அம்பானி மகனுக்கு நடைபெற்றதை போன்று பிரமாண்டமாக இல்லாமல், எளிய முறையிலேயே திருமணம் நடைபெறும் எனவும் அதானி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜீத் - திவா திருமணம் தொடர்பான முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஜீத் அதானி திருமணத்திற்கான விருந்தினர் பட்டியல்
கவுதம் அதானியின் விளக்கத்தின்படி, ஜீத்தின் திருமணம் ஒரு "எளிமையான மற்றும் பாரம்பரிய" விழாவாக இருக்கும். நட்சத்திரங்கள் நிறைந்த விழாவாக இருக்காது. இந்த விளக்கத்தின் மூலம், ஜீத் மற்றும் திவாவின் திருமணத்தில் உலகளாவிய பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்ற பல வதந்திகள் முடிவுக்கு வந்தன. எனவே இந்த திருமணம் ஒரு எளிய மற்றும் பாரம்பரிய குடும்ப முறையில் நடைபெற உள்ளது.
திருமணம்m நடைபெற உள்ள இடம்
ஜீத் அதானி மற்றும் திவா ஷாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கியது. ஜீத் அதானி மற்றும் திவா ஷாவின் திருமண விழா பிப்ரவரி 7 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த ஜோடி மார்ச் 2023 முதல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தகவல்களின்படி, திருமணத்தில் விருந்தினர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ எண்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
திருமணத்திற்கான ஏற்பாடுகள்:
ஜீத் மற்றும் திவா இருவருக்குமான ஆடைகளை, பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைக்கிறார். கூடுதலாக இந்தத் திருமணம் அடிப்படையில் இந்தியாவின் கலை பாரம்பரியத்திற்கு ஒரு மரியாதையாக இருக்கும் என கூறப்படுகிறது. காரணம் மகாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த கைவினைஞர்களால் திருமண விருந்தினர்களுக்காக பைத்தானி புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. குஜராத்தின் முந்த்ராவைச் சேர்ந்த நிதாபென் என்பவரால் மண் வேலைப்பாடு சுவரோவியங்களும் நிறுவப்படுகின்றன. ஜோத்பூரில் உள்ள பிபாஜி சூரி வாலாவின் பாரம்பரிய வளையல்களும் திருமண விழாக்களுக்கு வண்ணம் சேர்க்கும்.
மணமக்களின் விவரங்கள்:
ஜீத் அதானி தொழிலதிபர் கவுதம் அதானியின் இளைய மகன். அவர் அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டு அதானி குழுமத்தில் குழும தலைமை நிதி அதிகாரி அலுவலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு அவரது பொறுப்பு குழுவின் மூலோபாய நிதி, மூலதன சந்தைகள், அபாயங்கள் மற்றும் நிர்வாகக் கொள்கையில் கவனம் செலுத்துவதாகும். ஜீத் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியில் பட்டம் பெற்றவர். அவர் ஒரு பயிற்சி பெற்ற விமானியும் கூட. திவா ஷா வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள். அவரது குடும்பம் பெரும்பாலும் ஊடகப் பார்வையிலிருந்து விலகியே இருந்தது.





















