வங்கி கணக்கு 'Nominee' ஏன் அவசியம்?
வங்கி கணக்குதாரர்களிடம் வாரிசு விவரத்தைப் பெற வேண்டும்' என்று வங்கிகள், பதிவு பெற்ற வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிக்கை அனுப்பியுள்ளது.
ஒரு கணக்குதாரர் அல்லது முதலீட்டாளர், தான் இறக்க நேரிட்டால் தனது கணக்கில் உள்ள பணம் அல்லது முதலீடுயாருக்கு மாற்றப்பட வேண்டும் என்று விரும்பி அறிவிக்கிறாரோ, அவர்தான் வாரிசு.
முறையாக வாரிசு நியமனம் செய்யாதநிலையில் கணக்குதாரர் காலமானால், அவரது குடும்பத்தினர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள், அவரின் பணத்தை பெறுவதில் சிரமம் ஏற்படும்.
வங்கியில் தனது அடையாள அட்டை, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு விவரத்தை தெரிவித்தால் போதும். மிக எளிதாக அவரது கணக்குக்கு பணம் மாற்றப்பட்டு விடும்.
, முறையாக அறிவிக்கப்படாத வாரிசுகளுக்கு தேவையற்ற கஷ்டத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
கணக்குதாரரின் வாரிசு தாம்தான் என்பதை நிரூபிக்க அதுசார்ந்த ஆவணங்கள், உயில் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.
எத்தனை கணக்குதாரர்களின் வாரிசு நியமன விவரம் பெறப்பட்டிருக்கிறது என்று வங்கி வாடிக்கையாளர் சேவைக் குழு அல்லது வங்கி இயக்குனர்கள் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
காலாண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப் பிக்கப்பட வேண்டும் என்றும் வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.