மேலும் அறிய
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் புவனேஸ்வரன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

மாதிரி படம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில் இன்று மாலை பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், தொழிலதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உறவினர்களின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















