INSAT 3DS: விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்... இதனால் என்ன பயன்?
இன்சாட் 3DS செய்ற்கைக்கோளை தாங்கி கொண்டு ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 என்ற ராகெட் விண்ணில் பாய்ந்தது.
வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. இன்சாட் 3DS செய்ற்கைக்கோளை தாங்கி கொண்டு ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 என்ற ராகெட் விண்ணில் பாய்ந்தது.
இன்சாட் -3 டிஎஸ்' செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. காலநிலை கண்காணிப்பு செயற்கைகோள்களின் தொடரின் ஒரு பகுதியாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
GSLV-F14/INSAT-3DS Mission:
— ISRO (@isro) February 17, 2024
The vehicle has successfully placed the satellite into the intended geosynchronous transfer orbit. @moesgoi #INSAT3DS
ஜிஎஸ்எல்வி F14:
ஜிஎஸ்எல்வி F14 என்பது 420 டன் எடை கொண்ட 51.7 மீ நீளமுள்ள மூன்று-நிலை ஏவுகணை வாகனமாகும். முதல் நிலை (GS1) 139-டன் உந்துசக்தி கொண்ட ஒரு திட உந்துசக்தி (S139) மோட்டார் மற்றும் இரண்டாவது நிலையில் திரவ நிலையில் எரிபொருள் உள்ளது. மூன்றாவது நிலையில் திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் நிலை ஆகும்.
INSAT-3DS
INSAT-3DS பணியானது பூமி அறிவியல் அமைச்சகத்தால் (MoES) முழுமையாக நிதியளிக்கப்படுகிறது. இது வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகள் மற்றும் நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் தற்போது செயல்படும் இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோள்களுடன் வானிலை ஆய்வு சேவைகளை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
🚀GSLV-F14/🛰️INSAT-3DS Mission:
— ISRO (@isro) February 8, 2024
The mission is set for lift-off on February 17, 2024, at 17:30 Hrs. IST from SDSC-SHAR, Sriharikota.
In its 16th flight, the GSLV aims to deploy INSAT-3DS, a meteorological and disaster warning satellite.
The mission is fully funded by the… pic.twitter.com/s4I6Z8S2Vw
பணியின் முதன்மை நோக்கங்கள்:
பூமியின் மேற்பரப்பைக் கண்காணித்தல், வானிலை முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தகவல்களை வழங்குதல்பேரிடர் காலங்களில் மீட்பு சேவைகளை வழங்குதல்