மீண்டும் அமலுக்கு வருகிறது கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்வே கட்டணச் சலுகை!
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பயணிகளுக்கான சலுகை மீண்டும் அமலுக்கு வரவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் பயணிகளுக்கான சலுகை மீண்டும் அமலுக்கு வரவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையின் சார்பில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், ராஜ்தானி என பல வகைகளில் இயக்கப்படும் ரயில்களில் பிற வழி பயண வாகனங்களை காட்டிலும் கட்டணம் குறைவு என்பதால் பொதுமக்கள் எப்போதும் ரயில் பயணங்களை விரும்புவர்.
இந்த ரயில் பயணங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் உட்பட குறிப்பிட்ட சில பிரிவினருக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் ரயில்வே துறை கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை சந்தித்தது. அதன்பின் வழக்கம்போல ரயில்கள் இயக்கத்தை தொடங்கினாலும் கட்டண சலுகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனை மீண்டும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பல்வேறு அறிவிப்புகளுடன் நிறுத்தப்பட்ட கட்டண சலுகை மீண்டும் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டணச் சலுகை ஒவ்வொரு கம்பார்ட் மெண்ட்டுக்கும் அதில் பயணிக்க விரும்பும் பயணிகளின் வகைபாடுகளின் அடிப்படையில் மாற்றம் கொண்டதாக உள்ளது. இக்கட்டணச் சலுகை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மாற்றுத்திறனாளிகள்
துணை இல்லாமல் பயணிக்கும் மாற்றுத்திறானாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்பு, 3 ஏ.சி மற்றும் ஸ்லீப்பரில் 75% கட்டணச் சலுகையும், முதல் வகுப்பு ஏ.சி, இரண்டாம் வகுப்பு ஏ.சி ஆகிய கம்பார்ட்மெண்டுகளில் 50% கட்டணச் சலுகையும், ராஜஸ்தானி, சதட்பதி ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஏ.சி மற்றும் ஏ.சி கம்பார்ட்மெண்டுகளில் 25% கட்டணச் சலுகையும், மாதாந்திர மற்றும் காலாண்டு பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 50% கட்டணச் சலுகையும் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
நோயாளிகள்
புற்று நோயாளிகளுக்கு இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்புகளில் 75% கட்டணச் சலுகையும், முதல் வகுப்பு ஏ.சி, இரண்டாம் வகுப்பு ஏ.சி ஆகிய கம்பார்ட்மெண்டுகளில் 50% கட்டணச் சலுகையும், மூன்றாம் வகுப்பு ஏ.சி மற்றும் ஸ்லீப்பரில் 100% கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் எய்ட்ஸ் மற்றும் காசநோயளிகளுக்கும் மற்றும் குணப்படுத்துவதில் பெரும் போராட்டம் உள்ள நோயால் பாதிகப்பட்டோருக்கும் பயணத்தில் கட்டணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அரசினால் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர்களில் ஆண்களுக்கு 50%, பெண்களுக்கு 60% கட்டணச்சலுகை வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு
போரில் இறந்தவர்களின் மனைவிகளுக்கு 75% கட்டணச்சலுகையும் வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 50% கட்டணச்சலுகைவழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
கலைஞர்கள் மற்றும் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள்
கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 50% முதல் 75% வரை கட்டணச்சலுகை வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 25% கட்டணச்சலுகை வழங்கப்படும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த கட்டணச் சலுகை மீண்டும் அமலுக்கு வருவது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.