(Source: ECI/ABP News/ABP Majha)
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?
Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது Mpox குரங்கு அம்மை தொற்றுள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் பயணம் செய்த, இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் வயது கொண்ட ஆண் ஒருவருக்கு, குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் , குரங்கு அம்மை தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
A young male patient, who recently travelled from a country currently experiencing Mpox (monkeypox) transmission, has been identified as a suspect case of Mpox. The patient has been isolated in a designated hospital and is currently stable. Samples from the patient are being… pic.twitter.com/2DUNueIZWr
— ANI (@ANI) September 8, 2024
இந்நிலையில் நோயாளி ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். நோயாளியின் மாதிரிகள் Mpox இருப்பதை உறுதிப்படுத்த பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என ஏ,என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை:
ஆப்பிரிக்கா, காங்கோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் Mpox தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக Mpox-யை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
காங்கோ குடியரசு நாட்டில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை, பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவாகியுள்ளனர்.
இந்த நோய் தொற்றால் காங்கோ குடியரசில் மட்டும் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எச்சரிக்கை:
இந்நிலையில், ஆப்பிரிக்காவில் பரவலையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கையானது பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குரங்கு அம்மை தொற்று பரவல் உள்ள நாட்டில் இருந்து பயணம் செய்த நபருக்கு , தொற்று இருப்பதற்கான சந்தேகம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. அதன் காரணமாக சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் , குரங்கு அம்மை தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Also Read: Mpox Outbreak: குரங்கு அம்மை வைரஸ் பற்றி தெரியுமா? WHO வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்!