இந்தியாவில் ஒரே நாளில் 89,129 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 89 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 131 - இல் இருந்து ஒரு கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260- ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவுக்கு 714 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 396-ல் இருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 110-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 44 ஆயிரத்து 202 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 39-இல் இருந்து ஒரு கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 241 ஆக உள்ளது. இதுவரை 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.