(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Weather:புதுடெல்லி: அடுத்த ஆறு நாட்களில் வெயில் வாட்டி எடுக்கும் - இந்திய வானிலை மையம்
அடுத்த ஆறு நாட்களில் புது டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பகல் நேர வெப்பநிலை சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை திங்களன்று 30.6 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இது இயல்பை விட இரண்டு டிகிரி அதிகமாகும்.
இந்நிலையில் அடுத்த ஆறு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மார்ச் 13-ஆம் தேதி சமார் 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், மார்ச் 14ஆம் தேதிக்குள் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் உயர வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியாக இருக்கும் என்று என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம், திங்கள்கிழமை வரை, அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸிற்கு கீழே இருந்தது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 13.6 டிகிரி செல்சியஸ் ஆகும். மார்ச் 14 ஆம் தேதிக்குள் இது 17 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை, மாதத்தின் முதல் ஏழு நாட்களில், 16 டிகிரி செல்சியஸிற்க்கும் குறைவாகவே உள்ளது.
இதற்கிடையில், செவ்வாய்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை 8.30 மணியளவில் 89 சதவீத ஈரப்பதம் பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் வெப்பநிலை 16.6 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
மற்ற நாட்களில் வறண்ட வானிலையே இருக்கும். டெல்லிக்கு மழைப்பொழிவு குறித்து முன்னறிவிப்பில் இல்லை.
திங்கட்கிழமை காற்றின் தரம் 237 AQI உடன் ‘மோசமான’பிரிவில் இருந்தது. முந்தைய நாளில் ‘மிதமான’ பிரிவில் இருந்து. மேலும் அது மோசமடைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் அடுத்த மூன்று நாட்களில் (மார்ச் 8 முதல் 10 வரை) படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது, மேலும் ஏர் க்வாலிட்டி இண்டெக்ஸ் AQI மேம்பட வாய்ப்புள்ளது. மேலும், புதுடெல்லியில் இருக்கும் அதிகமான போக்குவரத்து பயன்பாடு கராணமாக காற்றின் தரம் இன்னும் மோசமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
#Delhi's Base Observatories Crossed 30°c Maximum temperature for the First time in this year.
— Weatherman Navdeep Dahiya (@navdeepdahiya55) March 7, 2022
Safdarjung recorded 30.6°c max while Palam Airport was 30.0°c on 7th March, 2022#Rajasthan warming up:#Barmer 35.5°c#Bikaner 34.5°c#Jodhpur 34.4°c#Churu 33.0°c
Expect further rise