சர்வதேச கோடிங் போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி ஐஐடி மாணவர்... குவியும் பாராட்டு
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டிசிஎஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பிரிவில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைக்கும்
சர்வதேச கோடிங் போட்டியில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் புரோகிராமிங் போட்டி என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் கோட்விட்டாவின் 10வது சீசனில் 87 நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டியில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த மாணவர் கலாஷ் குப்தா வெற்றிப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இதன்மூலம் கலாஷ் குப்தா 10 ஆயிரம் டாலர் தொகையை பரிசாகப் பெற்றுள்ளார். சிலியை சேர்ந்த மொரிசியோ ஆண்ட்ரெஸ் காரி லீல் இரண்டாம் இடம் பிடித்து ரூ.7 ஆயிரம் டாலர் தொகையை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக தைவான் நாட்டைச் சேர்ந்த ஜெப்ரி ஹோ 3 ஆயிரம் டாலர் பரிசுத்தொகையை பெற்றுள்ளார்.
IIT Delhi’s Computer Science and Engineering student, Kalash Gupta, has been declared the winner of the Tata Consultancy Services’ flagship global coding contest, TCS CodeVita Season 10.
— IIT Delhi (@iitdelhi) June 3, 2022
Read More- https://t.co/RckWdhdkR4 pic.twitter.com/ayBc0eOqVM
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஐடிகளில் சேர்வதற்காக நடைபெற்ற ஜேஇஇ நுழைவுத் தேர்வில் கலாஷ் குப்தா இந்திய அளவில் 3வது இடமும், டெல்லி அளவில் முதலிடமும் பெற்றிருந்தார். போட்டியில் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்ற ஐஐடி மாணவரான கலாஷ் குப்தாவுக்கு பல்கலைக்கழக இயக்குநர் ரங்கன் பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார்.
தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கலாஷ் குப்தா நான் போட்டியைத் தொடங்கியபோது, முதல் 3 இடங்களுக்குள் வருவேன் என்று நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் போட்டியில் முதல் சிக்கலை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால் தனது நம்பிக்கை தளர்ந்து போனதாகவும், ஆனால் அடுத்தடுத்த சிக்கல்கள் எளிதாக சரி செய்ய முடிந்ததால் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.
இந்த கோட்விட்டா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு டிசிஎஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பிரிவில் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்