Hyderabad Dog Attack: தெருநாய்கள் கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு: பதற வைக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி!
Hyderabad Dog Attack: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 4 வயது சிறுவன் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்ததுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 4 வயது சிறுவன் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடித்து சிறுவன் உயிரிழந்த வீடியோ அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஆம்பர்பேட் (Amberpet) பகுதியில் 4-வயது சிறுவன் பிரதீப் தெருவில் நடந்து கொண்டிருந்தார். இந்தப் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் சிறுவனின் தந்தை பாதுகாப்பு காவலராக பணிபுரிபவர். அன்றைக்கு, தந்தை, மகன் பிரதீப்பையும் ஆறு வயது மகளையும் வேலைக்கு உடன் அழைத்து வந்துள்ளார். ஆனால், எதிர்பாரதவிதமாக, குழந்தை விளையாடி கொண்டே தெருவிற்கு சென்றுள்ளது. அங்கிருந்த தெரு நாய்கள் சிறுவனை கடித்தே கொன்றுவிட்டது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ காட்சியில் பதிவானவை:
அப்போது, அங்கிருந்த 4 தெருநாய்கள் சிறுவனை சூழ்ந்து தாக்கத் தொடங்கின. குட்டி சிறுவன் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால், சிறுவனால நாய்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. நாய், சிறுவனின் ஆடைகளை பிடித்து இழுத்து கீழே தள்ளின. அவன் மீது ஏறி நாய்கள் கடித்து கீறின. சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட அவனது சோகதரி, அதிர்ச்சி அடைந்து தன் அப்பாவை அழைத்துள்ளார். அதற்குள்ளாக, நாய் மோசமாக கடித்ததில் சிறுவன் அசைவில்லாமல் மயங்கி கிடந்தான். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதத்தில் சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.
சிறுவன் தெரு நாய்களின் தாக்குதலுக்கு உள்ளான பதறவைக்கும் வீடியோ சி.சி.டி.வி.யில் பதிவாகியது. இந்த காணொலி சமூகவலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை பலரும் வேதனையுடன் பகிர்ந்துவருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுகொண்டுள்ளனர்.