நீட் தேர்வு பயிற்சிக்கு செல்கிறீர்களா? நிபுணர்கள் எதையெல்லாம் பரிந்துரைக்கிறார்கள்?
கடைசி நேரத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற முயற்சி எடுக்காமல், ஏற்கனவே படித்தவற்றை திருப்பி பார்ப்பது நல்லது.
பாடப் பிரிவுகளில் உள்ள கான்செப்ட்ஸை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். சந்தேகங்களை கேட்டு தெளிவு தொடங்குங்கள். புதிதாக எந்தவொரு தலைப்பிலும் கவனம் செலுத்துவதை தவிர்க்கவும்.
உங்களுக்கு பிடித்த, அதிகம்படித்த பாடங்களில் கவனம் செலுத்துங்கள். அதில் தெளிவு கிடைத்தவுடன் பலவீனமான பாடங்களில் கவனம் செலுத்தத் தொடங்குங்கள். நீட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் குறிப்பிட்ட பாடங்களில் வலுவாக இருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
கடைசி நிமிடத் தயாரிப்பை மற்றவர்களுடன் விவாதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. இது, உங்கள் மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன், சுய சந்தேகத்தையும் அதிகரிக்கும். ஒரு மனிதனுக்கு திடீரென்று மன அழுத்தம் ஏற்படுவதில்லை. மன அழுத்தத்தை நோக்கி ஒருவர் செல்கிறார் என்பதைக் கணிக்க சில அறிகுறிகள் உண்டு. இந்த அறிகுறிகளை புறக்கணிப்பது நல்லதல்ல. மாறாக இதனை புரிந்துகொண்டு நாம் செயல்பட வேண்டும். அவநம்பிக்கைகள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றை எளிதில் வீழ்த்துவதன் மூலமாக நீட் தேர்வில் வெற்றி பெறலாம்.
நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான விரிவுரைகளை தேசிய திறனறிதல் தேர்வு ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ வலைதளமான : https://nta.ac.in/LecturesContent என்பதில் பார்க்கலாம். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு இயங்குதளங்களை நுழைவுத்தேர்வுக்கான தயாரிப்புக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் .
மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. வரும் கல்வியாண்டிற்கான நீட் தேர்வில், 532 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சுமார் 76,928 மருத்துவ இடங்களுக்கு, 16.84 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.