DA Hike: அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
இமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், கூடவே, ஸ்பத்தி பள்ளத்தாக்கைச் சேர்ந்த 9000 பெண்களுக்குமான மாதாந்திர ஊக்கத் தொகையை ரூ.1500 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்பிதி பள்ளத்தாக்கு என்பது இமாச்சல பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள ஒரு குளிர் பாலைவன மலை பள்ளத்தாக்கு ஆகும். ஸ்பிதி என்றால் "நடுத்தர நிலம்" என்று அர்த்தமாகும். அதாவது திபெத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலம் என்பதாகும்.
அகவிலைப்படி உயர்வு:
இமாச்சலப் பிரதேச தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இமாச்சலப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, ஸ்பத்தி பள்ளத்தாக்கைச் சேர்ந்த 9000 பெண்களுக்குமான மாதாந்திர ஊக்கத் தொகையை ரூ.1500 ஆக மாநில அரசு அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2.15 லட்சம் அரசு ஊழியர்களும், 1.90 லட்ச ஓய்வுதாரர்களும் பயனடைவார்கள் என்றும் அரசுக்கு இதனால் கூடுதலாக ரூ.500 கோடி செலவாகும் என்றும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இமாச்சலப் பிரதேச அரசு ஸ்பிதி பகுதி பெண்களுக்கு அதுவும் குறிப்பாக 18 முதல் 60 வயதிலான பெண்களுக்கு மாதாமாதம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு ஹர் கர் லக்ஷ்மி, நாரி சம்மன் நிதி என்று பெயரிட்டது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு இம்மாச்சல் தின கொண்டாட்டத்தின்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஏர்ஸ்ட்ரிப்:
இமாச்சல் தினத்தை ஒட்டி முதல்வர் சுக்கு தேசியக் கொடியை ஏற்றி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோல் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான யஷ்வந்த் சிங் பார்மருக்கு நன்றியை தெரிவித்தார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் ராங்ரிக் பகுதியில் ஒரு ஏர்ஸ்ட்ரிப் அமைக்கப்படும் என்றார். அதேபோல் அடார்கு முதம் பின் பள்ளத்தாக்கு வரையில் ரூ.34 கோடி செலவில் ஒரு சாலை அமைக்கப்படும் என்றார்.
ஸ்பிதி பள்ளத்தாக்கிற்கு மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் அர்ப்பணித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் இந்தியன் ரிசர்வ் பட்டாலியனின் ஜவான்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரதமர் வாழ்த்து:
இமாச்சலப் பிரதேச மக்களுக்கு இமாச்சல தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், "இமாச்சல் தினத்தை முன்னிட்டு ஹிமாச்சல பிரதேச மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இயற்கை அழகுக்கும், சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற இம்மாநில மக்கள் எப்போதும் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.