மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 30.7.2021 இன்றைய தலைப்புச்செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்,
- ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
- அனைத்து மருத்துவர்களும் சில ஆண்டுகள் ஊரகப்பகுதிகளில் மருத்துவ சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்
- ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் – தமிழக அரசு உத்தரவு
- ஆப்கானிஸ்தானில் ராணுவம் -தலிபான்களுடனான பிரச்சினையையை யுத்தம் மூலம் தீர்வு காண அமெரிக்காவுடன் இணைந்து எதிர்ப்பு – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
- கொரோனா தடுப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் – மருத்துவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
- டெல்டா வகை கொரோனா வைரஸ் 132 நாடுகளுக்கு பரவியது – உலக சுகாதார அமைப்பு தகவல்
- மாநிலங்களிடம் 2.88 கோடி கொரோனா தடுப்பூசி கையிருப்பு – மத்திய அரசு தகவல்
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 465 பேர் குணம் அடைந்தனர்
- தமிழ்நாட்டில் பத்திரிகைககள் மற்றும் தொலைக்காட்சி மீது தொடரப்பட்ட 90 அவதூறு வழக்குகள் ரத்து
- ஆந்திராவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அரசு சார்பில் 30 சதவீதம் மானியம் – ஜெகன்மோகன் ரெட்டி
- ராமநாதபுரத்தில் 450 கிலோ புள்ளி சுறா இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
- சிவகாசியில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலையை வாங்க வட்டாட்சியர் மறுப்பு
- உரிமையாளர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தாததால் திருவண்ணாமலையில் இரண்டு கடைகளுக்கு சீல்
- மணப்பாறையில் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 9 வயது சிறுமியை காப்பாற்றிய 9 வயது சிறுவன் – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து ஊக்கத்தொகை
- தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலக மேலாளர் வீட்டில் சோதனை – 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்
- தி.மு.க. எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி – நாடாளுமன்ற கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை
- புதிய கல்விக்கொள்ளைதான் நாட்டின் எதிர்காலம் – பிரதமர் மோடி பேச்சு
- மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – தமிழ்நாடு எல்லையில் சுகாதார கண்காணிப்பு பணிகள் தீவிரம்
- சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 272 உயர்ந்து ரூபாய் 36 ஆயிரத்து 328க்கு விற்கப்பட்டது
- இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா தோல்வி – தொடரை வென்றது இலங்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion