மேலும் அறிய
Advertisement
Morning Wrap | 23.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்...!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஒலிம்பிக் திருவிழா இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடக்கம்
- ஒலிம்பிக் டோக்கியோ திருவிழா தொடக்க விழாவில் பிரம்மாண்ட வாண வேடிக்கைகளுக்கு ஏற்பாடு
- ஜப்பான் ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜப்பான் மன்னர், பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு
- 68 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தில் ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
- ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இந்தியா சார்பில் 20 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பு – 6 அதிகாரிகளுக்கு மட்டுமே நேரில் தொடக்கவிழாவை காண வாய்ப்பு
- ஒலிம்பிக் தொடக்கவிழாவில் இந்தியா சார்பில் மேரிகோம், ஹாக்கி கேப்டன் மன்தீப் சிங் இந்திய கொடியை ஏந்தி வலம் வருகின்றனர்
- 204 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று அணிவகுப்பு
- தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- பறவைகள் சரணாலயம், வனவிலங்குகள் சரணாலயங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு
- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
- லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூபாய் 25.56 லட்சம் ரொக்கம் பறிமுதல், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது
- விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பது சரியா? தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
- கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
- 12ம் வகுப்பு துணைத்தேர்விற்கு இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – தேர்வுகள் இயக்ககம்
- துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைத்து தேர்வுகளையும் விண்ணப்பிக்க வேண்டும் – தேர்வுகள் இயக்ககம்
- 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6-ந் தேதி தொடக்கம் – ஆகஸ்ட் 19-ந் தேதி வரை நடக்கிறது
- பில்லூர் அணை முழு கொள்ளவை நெருங்குகிறது – பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்தி வந்த நிறுவனங்களில் போலீசார் சோதனை
- தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
- ரூபாய் 2 ஆயிரத்து 467 கோடி செலவில் சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கம்
- ஊரடங்கிற்கு பிறகு பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கம்
- இலங்கையுடன் இந்தியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உடல்நலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion