மேலும் அறிய
Advertisement
இன்றைய முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழகத்தில் வரும் ஜூலை 5-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
- தமிழ்நாட்டில் ஏற்கனவே மூன்று வகைககளாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்
- வகை 1ல் இடம்பெற்றுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கூடுதல் தளர்வுகள்
- வகை 1ல் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் திங்கள் முதல் தேநீர் கடைகளுக்கு அனுமதி
- வகை 1ல் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் சாலையோர உணவுக்கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி
- வகை1ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் அழகுநிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதி.
- கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் நடத்துவதற்கு அனுமதி.
- கொரோனா பரிசோதனை செய்த பின்னர் படப்பிடிப்பு நடத்த அனுமதி.
- வகை 2ல் இடம்பெற்றுள்ள அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.
- மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை 50 சதவீத பணியாளர்களுடன் இயக்குவதற்கு அனுமதி.
- வகை3ல் இடம்பெற்றுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
- அனைத்து துணிக்கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
- அனைத்து நகைக்கடைகளும் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி.
- வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி.
- கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு நடத்த அனுமதி.
- வகை 2 மற்றும் 3ல் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.
- வகை 2 மற்றும் 3ல் இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதி.
- அனைத்த கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி.
- வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே இ – பதிவு இல்லாமல் பயணிக்கலாம்.
- அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு
- புதுச்சேரியில் புதிய அமைச்சரவை நாளை பொறுப்பேற்பு – பா.ஜ.க.வில் இருவருக்கு பதவி
- தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா.
- சென்னையில் மேலும் 350 பேருக்கு கொரோனா. கோவையில் 698 நபர்களுக்கு புதியதாக கொரோனா.
- கொரோனாவால் 130 பேர் உயிரிழப்பு. நேற்று மட்டும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 132 ஆக பதிவு.
- மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கை ஒரு மணி நேரம் முடக்கியது அமெரிக்க தலைமை நிறுவனம்.
- கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை.
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 51 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா.
- நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1,329 பேர் உயிரிழப்பு.
- நட்ப்பு கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைகழகத்தில் எம்.பில். படிப்பு கைவிடப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion