மேலும் அறிய
Advertisement
Morning Wrap : (25.06.2021) இன்றைய தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுநர்கள் குழுவினருடன் ஆலோசனை.
- தமிழ்நாட்டிற்கு இன்று 3 லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகிறது.
- தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 6 ஆயிரத்து 162 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 9 ஆயிரத்து 46 பேர் நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பினர்.
- கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில் நேற்று 155 நபர்கள் உயிரிழப்பு.
- சென்னையில் புதியதாக 372 நபர்களுக்கு புதியதாக கொரோனா. கோவையிலும் ஒருநாள் பாதிப்பு 756 ஆக குறைந்தது.
- மும்பையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு. ஊரடங்கு தளர்வுகளை தற்காலிகமாக நிறுத்தியது மகாராஷ்ட்ரா அரசு.
- காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று நடக்கிறது. மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிக்க முடிவு.
- ஜூலை 31-ந் தேதிக்குள் 12 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.
- வெளிநாடு செல்பவர்களின் வசதிக்காக கொரோனா நெகட்டிவ் சான்றிதழில் பாஸ்போர்ட் எண் இணைக்கும் வசதி அறிமுகம்.
- ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளிநாடு பயணம்.
- ஜம்மு – காஷ்மீரில் தேர்தலை நடத்த நடவடிக்கை – பிரதமருடனான சந்திப்பு திருப்தி அளிப்பதாக காஷ்மீர் தலைவர்கள் கருத்து.
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் – துளியளவும் சந்தேகப்பட தேவையில்லை – சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.
- கொரோனா நிவாரண நிதியான இரண்டாம் தவணை ரூபாய் 2000 ஆயிரத்தை இன்றைக்குள் வழங்க வேண்டும் – ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.
- ஆளுநர் உரையில் இடம்பெற்ற திட்டங்கள், நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் நேற்று ஆலோசனை.
- உள்ளாட்சித் தேர்தல் குறித்து தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் – அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.
- சேலம், ஆத்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் – ஊழியர்கள் கவனமாக செயல்பட்டதால் பயங்கர விபத்து தவிர்ப்பு.
- சென்னையில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் ஹரியானாவில் கைது- சென்னை அழைத்து வந்தனர் போலீசார்.
- ஸ்விக்கி ஆர்டர் உணவு மீது நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் – சென்னையில் உள்ள தனியார் உணவகத்திற்கு தடை.
- 85 நாடுகளுக்கு பரவியது டெல்டா வைரஸ். அதிகளவில் பரவுவதுடன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
- டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண் குணம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion