மேலும் அறிய

GST Revised Rates: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம்...இன்று முதல் அமல்...எந்தெந்த பொருள்களின் விலை மாறுகிறது..!

பிப்ரவரி 18ஆம் டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் பிப்ரவரி 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ராப் வெல்லம்:

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விவரித்தார். அதன்படி, ராப் என்ற வெல்லத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

ராப் வெல்லத்தை பொறுத்தவரையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மீதான ஜிஎஸ்டி விகிதம் 18% இல் இருந்து பூஜ்யம் அல்லது 5% ஆகக் குறைக்கப்பட்டது. அதாவது, லேபிளிடப்படாத ராப் வெல்லம் பூஜ்ய சதவிகிதமாகவும் முன்கூட்டியே தொகுக்கப்பட்டு லேபிளிடப்பட்ட ராப் வெல்லம்  5 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது. 

இன்று முதல் அமல்:

இந்நிலையில், ராப் வெல்லம் மீதான வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதேபோல, பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பும் இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பென்சில் ஷார்பனர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. 

பிப்ரவரி 18ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், "மத்திய அரசின் நிதி ஆதாரங்களில் இருந்து ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்படும். இந்த விடுவிப்பின் மூலம், ஜிஎஸ்டி (மாநிலங்களுக்கு இழப்பீடு) சட்டம், 2017 இல் திட்டமிடப்பட்டுள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை மத்திய அரசு அளிக்கும்.

இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம். அதே தொகை எதிர்கால இழப்பீடு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை இன்று முதல் அளிக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளோம். அதாவது, ஜூன் மாதத்திற்கான மொத்த நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.16,982 கோடி விடுவிக்கப்படும்" என்றார்.

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கூட்டம் மதுரையில் நடத்தப்படாததற்கு விளக்கம் அளித்தார்.

"மதுரைக்கு இத்தனை மாநில அமைச்சர்கள், மத்திய துறை செயலாளர்கள் ஆகியோர் வரும் சூழலில் முறையான விருந்தோம்பல் அளிக்க நேரம் இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை டெல்லியில் நடத்திவிட்டு அடுத்த கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என கேட்டேன். அதை ஏற்று கொண்டு டெல்லியில் நடத்தியுள்ளார்கள்" என பேசியிருந்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) ஒரு மறைமுக வரியாகும். இந்தியா முழுவதும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. 

இதனால், மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Gold Rate: அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக!  பின்னணியில் அமித்ஷா  ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
TVK Vijay: EPS-ஐ ஓரங்கட்டிய தவெக! பின்னணியில் அமித்ஷா ”உதயநிதி vs விஜய்” பரபரக்கும் தமிழக அரசியல்
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Gold Rate: அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
அய்யோ.. பயந்த மாதிரியே ஆயிடுச்சே.. ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை...
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
EPFO New Option: அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
அடி சக்க.. இனி PF பணத்த எடுக்கறது கஷ்டமில்ல.. உடனடியா கிடைக்கும்.. எப்படி தெரியுமா.?
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Embed widget