பிஎஃப் சந்தாதாரர்கள் உஷார்: இந்தச் செயலியை டவுன்லோட் செய்தால் பணம் அம்பேல்!
பிஎஃப் சந்தாதாரர்களே உஷாராக இருங்கள். இது உங்களுக்கான செய்தி. குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோட் செய்தால், பிஎஃப் சந்தாவில் உள்ள பணம் மொத்தமும் சுருட்டப்பட்டு விடும் என எச்சரிக்கப்படுகிறது.
பிஎஃப் சந்தாதாரர்களே உஷாராக இருங்கள். இது உங்களுக்கான செய்தி. குறிப்பிட்ட ஒரு செயலியை டவுன்லோட் செய்தால், பிஎஃப் சந்தாவில் உள்ள பணம் மொத்தமும் சுருட்டப்பட்டு விடும் என எச்சரிக்கப்படுகிறது.
பணம் வரும் செயலி என்றால் போதும் மனிதன் பத்தும் செய்வான். குறைந்த வட்டியில் கடனளிக்கும் செயலி, குறைந்த மாதத் தவணையில் பொருள் விற்கும் செயலி, பணத்தை இரட்டிப்பாக்கித் தரும் செயலி. இப்படி எந்த செயலியைப் பார்த்தாலும் போதும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் கூட டவுன்லோட் செய்வதில் நம் மக்களுக்கு நிகர் யாரும் இல்லை.
ஒரு மெசேஜில் உங்களுக்கு கடன் வேணுமா எனக் கேட்டால் போதும் உடனே ஃபோன் செய்து பார்த்து ஏமாறுவது நோய் போல நம் சமூகத்தில் உள்ளது. சீன செயலிகளுக்கு இப்படி லட்சக்கணக்கான பணத்தை ஏமாந்தவர்கள் ஏராளம்.
மாத சம்பளம் பெரும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் PF என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்ட EPFO (Employees' Provident Fund Organisation) என்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
அனைத்து தொழிலாளர்களும் ஒரே விதமான சம்பளத்தை பெறுவதில்லை. சிலர் அதிகமான சம்பளத்தையும், சிலர் குறைவான சம்பளத்தையும் பெறுவார்கள். அவரவர் பெரும் சம்பளத்தில் 12% PF தொகையாக பிடித்தம் செய்வார்கள். அதே அளவு 12% தொகையை உங்கள் நிறுவனத்தின் சார்பிலும் PF கணக்கில் செலுத்தப்படும். நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் 12 சதவீதத்தில் 8.33% பென்ஷன் திட்டத்திலும், 3.67% வருங்கால வைப்பு திட்டத்திலும் செலுத்தப்படும். இந்த தொகைகளை சேர்த்து வருங்கால வைப்பு ஆணையத்தில் நிறுவனம் முதலீடு செய்யும்.
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு பிஎஃப் பணம் தான் பெரிய சேமிப்பு. கல்வி, மருத்துவம், திருமணம், வீடு கட்டுதல் எனப் பல அவசரத் தேவைகளுக்கும் அதிலிருந்து கடன் பெற்று சமாளிக்க இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் பிஎஃப் சந்தா பெரும் உதவியாக பலருக்கும் அமைந்தது. விண்ணப்பித்த ஒரு வாரத்திலேயே சந்தாதாரர்களுக்கு பணத்தை விடுவித்தது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம். பேரிடர் காலத்தில் பெரும் உதவியாக இருந்த பிஎஃப் பணத்தை குறிவிஅத்து இப்போது பல கிரிமினங்கள் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிஎஃப் சந்தாதரர்கள் அதிகாரப்பூர்வ செயலியைத் தவிர வேறு எந்த பிஎஃப் செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என பிஎஃப் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறாக செய்வதன் மூலம் சில விஷமிகள் அந்தச் செயலி வாயிலாக யுஏஎன், பான் எண், ஆதார் எண் போன்ற தகவல்களைத் திருடிவிடுகின்றனர். அதனை வைத்துக் கொண்டு போலி வங்கிக் கணக்கைத் தொடங்கி இபிஎஃப் பணத்தை சுருட்டிவிடுகின்றனர்.
பொதுவாகவே கூகுள் ப்ளேஸ்டோரில் வெரிஃபைட் அந்தஸ்து பெற்ற செயலிகளை, அதுவும் தேவை இருப்பினும் மட்டுமே பதிவிறக்கவும் செய்ய வேண்டும். அதுவும் நிதி சார்ந்த செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் ஆர்பிஐ தெளிவான வழிகாட்டுதலை வகுத்துள்ளது.