Arvind Kejriwal: கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்; இதுவே முதல்முறை!
Aam Aadmi Party: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஒரு அரசியல் கட்சியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது, இதுவே முதல் முறை என்று தகவல் தெரிவிக்கின்றன.
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் தேதி: திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். பின்னர் கெஜ்ரிவால் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அரவிந்த கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் தொடர்பாக, கடந்த மே 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்தது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு கூட அவரின் சொந்த பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதில்லை என அமலாக்கத்துறை வாதிட்டது.
2024ஆம் ஆண்டு, மே 10ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
குற்றப்பத்திரிகை தாக்கல்:
இந்நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்வதற்கு தடை கோரி, கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஒரு அரசியல் கட்சியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது, இதுவே முதல் முறை என்று தகவல் என்றும் கூறப்படுகிறது.