மேலும் அறிய

மகாராஷ்டிராவுக்கு எப்போது தேர்தல்? இந்திய தேர்தல் ஆணையம் தந்த பதில்!

கடந்த முறை, ஹரியானா, மகாராஷ்டிராவுக்கு சேர்த்துதான் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை மகாராஷ்டிராவுக்கு நடத்தாமல் ஹரியானாவுக்கு தேர்தலை தனித்து நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்.

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் (தற்போது யூனியன் பிரதேசமாக உள்ளது) ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, ஹரியானா, ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் தேதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

தள்ளிப்போகும் மகாராஷ்டிரா தேர்தல்? கடந்த முறை, ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை மகாராஷ்டிராவுக்கு நடத்தாமல் ஜம்மு காஷ்மீருடன் சேர்த்து ஹரியானாவுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார், "கடந்த முறை, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. அந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீர் ஒரு காரணியாக இல்லை. ஆனால், இந்த முறை 4 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன.

இதற்குப் பிறகு உடனடியாக 5வது மாநிலத்திற்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்டை தொடர்ந்து டெல்லியில் தேர்தல் தொடங்க உள்ளது. பாதுகாப்பு படைகளின் தேவையைப் பொறுத்து, நாங்கள் 2 தேர்தல்களை ஒன்றாக நடத்த முடிவு செய்துள்ளோம்.

மற்ற காரணி என்னவென்றால், மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்திருக்கிறது. அதோடு, பல பண்டிகைகளும் வர உள்ளன" என்றார்.

தேர்தல் தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலானது 3 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல, ஹரியானாவில் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில தேர்தல் அறிவிப்பு: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்ட தகவலின்படி, ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து, செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவுக்கு ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, இரண்டு மாநில தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
Miss Universe India 2025: யார் இந்த மணிகா விஷ்வகர்மா? பிரபஞ்ச அழகி போட்டிக்கு தேர்வான இந்தியர் - வீடியோ வைரல்
Miss Universe India 2025: யார் இந்த மணிகா விஷ்வகர்மா? பிரபஞ்ச அழகி போட்டிக்கு தேர்வான இந்தியர் - வீடியோ வைரல்
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
Miss Universe India 2025: யார் இந்த மணிகா விஷ்வகர்மா? பிரபஞ்ச அழகி போட்டிக்கு தேர்வான இந்தியர் - வீடியோ வைரல்
Miss Universe India 2025: யார் இந்த மணிகா விஷ்வகர்மா? பிரபஞ்ச அழகி போட்டிக்கு தேர்வான இந்தியர் - வீடியோ வைரல்
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Tamilnadu Rounudup 19.08.2025: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Rounudup 19.08.2025: காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - 10 மணி சம்பவங்கள்
Hyundai Upcoming Cars: லிஸ்ட் போடு.. EV, ஹைப்ரிட், எஸ்யுவிக்களை அடுத்தடுத்து இறக்கும் ஹுண்டாய் - உங்க சாய்ஸ் என்ன?
Hyundai Upcoming Cars: லிஸ்ட் போடு.. EV, ஹைப்ரிட், எஸ்யுவிக்களை அடுத்தடுத்து இறக்கும் ஹுண்டாய் - உங்க சாய்ஸ் என்ன?
Car Price Reduce: தாறுமாறா குறையப்போகும் கார்கள் விலை.. இத்தனை ஆயிரமா? எந்தெந்த கார்கள்?
Car Price Reduce: தாறுமாறா குறையப்போகும் கார்கள் விலை.. இத்தனை ஆயிரமா? எந்தெந்த கார்கள்?
Embed widget