Delhi Lockdown Extended: டெல்லியில் பொது முடக்கநிலை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
Delhi Lockdown Extended: கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி ஒரு வார கால பொது முடக்க நிலையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்
தலைநகர் டெல்லியில் கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த, நாளை முதல் மேலும் ஒரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க, டெல்லி அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. முன்னதாக, டெல்லி வார இறுதி நாட்களுக்கான ஊரடங்கு கடந்த ஏப்ரல் 16ம் இன்று இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என டெல்லி அரசு தெரிவித்தது.
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி ஒரு வார கால பொது முடக்க நிலையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அமலில் உள்ள முழுமையான ஊரடங்கு நாளை காலை 5 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த,24 மணி நேரத்தில் மட்டும் 24,103 பேருக்கு நோய்த் தொற்று புதிகாக கண்டறியப்பட்டது. மேலும், அதே வேளையில் 357 பேர் நோய் தொற்று காரணாமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில், தற்போது கொரோனா நோய்த் தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்படுவர்கள் விகிதம் (Positivity Rate) 32.3 சதவீதமாக உள்ளது. கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில், தற்போது அதிகமானோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஒரு வார பொது முடக்கநிலை இருந்தபோதும் இந்த விகிதம் அதிகரித்திருப்பது டெல்லி அரசை கவலையடைய செய்துள்ளது.
முன்னதாக, கோவிட்-19 பொது ஊரடங்கு மற்றும் தடை காலத்தில், அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்போர் மற்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.