மேலும் அறிய

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி - உடல்நிலை எப்படி இருக்கு?

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று புதுடெல்லியில் நடைபெறும் விமானப் படைத்தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக 10 ஆயிரம் கடந்து பதிவான தினசரி பாதிப்பு இன்று 12 ஆயிரத்தை கடந்து பதிவாகியுள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவான தொற்று நிலவரம் ஆகும். இந்தியாவில் மொத்தமாக 65 ஆயிரத்து 286 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,42,61,476 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,230 ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.67 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 60,313 லிருந்து 65,286 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 19,398 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 6102 பேர், தலைநகர் டெல்லியில் 6046 பேர், உத்திர பிரதேசத்தில் – 4298 பேர், தமிழ்நாடு – 3563 பேர், ஹரியானாவில் – 4891 பேர், குஜராத்தில் – 2091 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 65,286 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2,30,419 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிராவில் 4 பேர், உத்திர பிரதேசத்தில் 4 பேர், தமிழ்நாட்டில் 2 பேர், கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் 2 பேர் என மொத்தம் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Election Commission EPS: ‘சின்னமும் என்னுது; கட்சியும் என்னுது’ - பழனிசாமியை பன்னீர் தெளித்து அங்கீகரித்த தேர்தல் ஆணையம்

 

CM Stalin: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை: செம அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் - வரவேற்ற பாஜக!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget