இறந்ததாக மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்ட உடல்.. ஃப்ரீசர் பாக்ஸிலிருந்து உயிருடன் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்: என்ன நடந்தது?
சரியாக, ஏழு மணிநேரத்திற்கு பிறகு ஸ்ரீகேஷ் குமாரின் மைத்துனர் மதுபாலா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் 40 வயதான ஸ்ரீகேஷ் குமார் என்பவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இவர் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஸ்ரீகேஷ் குமாரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீகேஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவருக்கு இதயத் துடிப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து,விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீகேஷ் குமாரின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஸ்ரீகேஷ் குமாரின் உடலானது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக பிணவறையில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைத்துள்ளனர்.
சரியாக, ஏழு மணிநேரத்திற்கு பிறகு ஸ்ரீகேஷ் குமாரின் மைத்துனர் மதுபாலா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீகேஷ் குமார் உடல் அசைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மருத்துவர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
#Watch: Seven hours after being kept in a #mortuary freezer, UP man came out alive, confounding medical staff.#DeadOrAlive pic.twitter.com/2LXO2ZM4MA
— TOI Bareilly (@TOIBareilly) November 21, 2021
தொடர்ந்து, ஸ்ரீகேஷ் குமார் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீகேஷ் குமார் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவரை காப்பாற்றுவதே எங்கள் முதல் வேலை என்று தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர், ஸ்ரீகுமார் இறப்பதற்கு முன்பே, அவரை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கிட்டத்தட்ட கொலை செய்ய பார்த்துவிட்டார்கள். மருத்துவமனையில் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் தெரிவிக்கையில், அதிகாலை 3 மணியளவில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீகேஷ் குமார் உடலை பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. தொடர்ந்து நடத்திய பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகே அவர் இறந்ததாக தெரிவித்தோம். காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உலகத்தில் எப்பொழுதாவது நடக்கும் அரிதான நிகழ்வு. இதை எப்படி அலட்சியம் என்று தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்